Sunday, March 31, 2024

Navagraha 108 Potri - நவகிரக 108 போற்றி

Navagraha 108 Potri

  1. ஓம் ஓங்காரசூக்கும உடலாய் போற்றி
  2. ஓம் ஓராழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
  3. ஓம் ஏழன் குதிரை ஏவினை போற்றி
  4. ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி
  5. ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
  6. ஓம் பொற்ப்பட்டுடையி பொழிவாய் போற்றி
  7. ஓம் வியாவிருதி ஏழ் விளங்குவாய் போற்றி
  8. ஓம் பன்னிரு முனிதுதிப்பாற்கரா போற்றி
  9. ஓம் மழைபருவம் மாற்றுவாய் போற்றி
  10. ஓம் மூலாகினியில் முகிழ்ந்த்தாய் போற்றி
  11. ஓம் வீதிமுன்றிராசி பன்னிரண்டாய் போற்றி
  12. ஓம் சூரியா வீரியா சுகமருள்வாய் போற்றி
  13. ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
  14. ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
  15. ஓம் சவுக்கவடியில் இருந்தாய் போற்றி
  16. ஓம் முத்துவிமான வாகனா போற்றி
  17. ஓம் சக்கரம் மூன்றுடைத்தேராய் போற்றி
  18. ஓம் குருந்த மலர் நிறக் குதிரையாய் போற்றி
  19. ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
  20. ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
  21. ஓம் சக்தியை நடுக்கொள் மண்டலா போற்றி
  22. ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
  23. ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
  24. ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி
  25. ஓம் பூதேவி குமரா பெளமா போற்றி
  26. ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
  27. ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
  28. ஓம் முக்கோண வடிவிருக்கையாய் போற்றி
  29. ஓம் எண்பரித் தேர்மிசை இயல்பாய் போற்றி
  30. ஓம் தவத்தால் உயர்பதம் அடைந்தாய் போற்றி
  31. ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
  32. ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி
  33. ஓம் மங்களாம் தரும் மங்கலா போற்றி
  34. ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
  35. ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
  36. ஓம் அங்காரகனே அருள்வாய் போற்றி
  37. ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
  38. ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
  39. ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
  40. ஓம் வெண்காந்தள் மலர்விரும்பினாய் போற்றி
  41. ஓம் குதிரைவாகனங் கொண்டோய் போற்றி
  42. ஓம் நால்பரித்தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
  43. ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
  44. ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி
  45. ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
  46. ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
  47. ஓம் இருக்கு வேததிருந்தாய் போற்றி
  48. ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி
  49. ஓம் பிருகு புத்திரனே சுக்கிரா போற்றி
  50. ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
  51. ஓம் ஐங்கோணாசனம் அமர்ந்தாய் போற்றி
  52. ஓம் வெண்டாமரைமலர் கொண்டோய் போற்றி
  53. ஓம் கருட வாகனத்தில் ஒளிர்வாய் போற்றி
  54. ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
  55. ஓம் சிவனால் ஒளி நிறம் பெற்றாய் போற்றி
  56. ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
  57. ஓம் தண்டன் நாடுகாடாய்க்கினாய் போற்றி
  58. ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
  59. ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
  60. ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
  61. ஓம் சூரியபாலா சுபமருள் போற்றி
  62. ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
  63. ஓம் வில்வடிவாசனம் விளங்கினாய் போற்றி
  64. ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி
  65. ஓம் கருங்கு வளைமலருகந்தாய் போற்றி
  66. ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
  67. ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
  68. ஓம் நளனைச் சோதிதாண்டாய் போற்றி
  69. ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
  70. ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
  71. ஓம் கலியென்றொரு பெயருடையாய் போற்றி
  72. ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி
  73. ஓம் சிம்மிகை மைந்தா கோளே போற்றி
  74. ஓம் கொடிவடிவமர்ந்த கோளே போற்றி
  75. ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
  76. ஓம் தென்மேற்றிசையில் திகழ்வாய் போற்றி
  77. ஓம் மந்தாரை மலர் மகிழ்ந்தாய் போற்றி
  78. ஓம் உளுந்தும் அருகும் உகர்ந்தாய் போற்றி
  79. ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி
  80. ஓம் கேதுவே போற்றி
  81. ஓம் கேடறச் செய்பவனே போற்றி
  82. ஓம் செம்மேனியனே போற்றி
  83. ஓம் சிம்மவாஹனனே போற்றி
  84. ஓம் திங்களின் பகையே போற்றி
  85. ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
  86. ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
  87. ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி
  88. ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
  89. ஓம் ஓருட லிருகோளானாய் போற்றி
  90. ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி
  91. ஓம் இராஜபோகம் தரும் இராகுவே போற்றி
  92. ஓம் இராகுவினுடலே கேதுவே போற்றி
  93. ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
  94. ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
  95. ஓம் முச்சில் வடிவில் முகழ்ந்தாய் போற்றி
  96. ஓம் செவ்வல் லிமலர் சேர்ந்தாய் போற்றி
  97. ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
  98. ஓம் அரிவாகனத்தில் அமர்ந்தாய் போற்றி
  99. ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி
  100. ஓம் வடமேற்றிசையில் நின்றாய் போற்றி
  101. ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
  102. ஓம் தவத்தால் கோள் நிலை பெற்றாய் போற்றி
  103. ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
  104. ஓம் அரவத்தலையோனே போற்றி
  105. ஓம் வடமேற்குகிலிருப்பவனே போற்றி
  106. ஓம் கொள்விரும்பியே போற்றி
  107. ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி
  108. ஓம் சூரியனாதிதேவர்கள் போற்றி


Navagraha 108 Potri - நவகிரகங்கள் 108 போற்றி

நவகிரகங்கள் 108 போற்றி

  1. ஓம் சூரியனே போற்றி
  2. ஓம் சூழ்ஒளியே போற்றி
  3. ஓம் இருள் கெடுப்பவனே போற்றி
  4. ஓம் பார்வை கொடுப்பவனே போற்றி
  5. ஓம் கோள்களின் தலைவனே போற்றி
  6. ஓம் கோதுமை விரும்பியே போற்றி
  7. ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
  8. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  9. ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
  10. ஓம் செந்நிற மேனியனே போற்றி
  11. ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
  12. ஓம் நலமயில் வாகனனே போற்றி
  13. ஓம் தேரில் வருபவனே போற்றி
  14. ஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றி
  15. ஓம் சந்திரனே போற்றி
  16. ஓம் சமுத்திர நாயகனே போற்றி
  17. ஓம் இனிமையே போற்றி
  18. ஓம் வெண்மையே போற்றி
  19. ஓம் குளுமையே போற்றி
  20. ஓம் கடலில் உதிப்பவனே போற்றி
  21. ஓம் நரிவாகனனே போற்றி
  22. ஓம் நட்சத்திர வாகனனே
  23. ஓம் தென்கீழ் திசையோனே
  24. ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
  25. ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
  26. ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
  27. ஓம் அங்காரகனே போற்றி
  28. ஓம் அரத்த மேனியனே போற்றி
  29. ஓம் தென்திசையிருப்போனே போற்றி
  30. ஓம் துவரைப் பிரியனே போற்றி
  31. ஓம் க்ஷத்திரியனே போற்றி
  32. ஓம் தைரியம் அளிப்பவனே
  33. ஓம் குஜனே போற்றி
  34. ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
  35. ஓம் அன்ன வாகனனே போற்றி
  36. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
  37. ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
  38. ஓம் வேண்டுவன தருவோனே போற்றி
  39. ஓம் புதனே போற்றி
  40. ஓம் புத்தி அளிப்பவனே போற்றி
  41. ஓம் பச்சை நிறத்தவனே போற்றி
  42. ஓம் பற்று அறுப்பவனே போற்றி
  43. ஓம் பயற்றில் அரியவனே போற்றி
  44. ஓம் பொன்னினும் அரியவனே போற்றி
  45. ஓம் குதிரையில் வருபவனே போற்றி
  46. ஓம் வடகீழ்த்திசையோனே போற்றி
  47. ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
  48. ஓம் சுப கிரகமே போற்றி
  49. ஓம் வியாழ பகவானே போற்றி
  50. ஓம் வடபுறத்திருப்போனே போற்றி
  51. ஓம் பிருகஸ்பதியே போற்றி
  52. ஓம் குருபரனே போற்றி
  53. ஓம் சத்திய வடிவோனே போற்றி
  54. ஓம் பிரம்ம குலத்தோனே போற்றி
  55. ஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி
  56. ஓம் மெய் உணர்த்துபவனே போற்றி
  57. ஓம் கலை நாயகனே போற்றி
  58. ஓம் கடலை ஏற்பவனே போற்றி
  59. ஓம் வேழ வாகனனே போற்றி
  60. ஓம் வானோர் மந்திரியே போற்றி
  61. ஓம் சுக்கிரனே போற்றி
  62. ஓம் சுப கிரகமே போற்றி
  63. ஓம் கிழக்கே இருப்பவனே போற்றி
  64. ஓம் கருட வாகனனே போற்றி
  65. ஓம் பொன்பொருள் தருபவனே போற்றி
  66. ஓம் போற்றப்படுபவனே போற்றி
  67. ஓம் மழை பொழிபவனே போற்றி
  68. ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
  69. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
  70. ஓம் இறவாமை அளிப்பவனே போற்றி
  71. ஓம் சனீஸ்வரனே போற்றி
  72. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
  73. ஓம் நீல வண்ணனே போற்றி
  74. ஓம் நள்ளாறு நாயகனே போற்றி
  75. ஓம் அருள் நாயகனே போற்றி
  76. ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
  77. ஓம் கருமை விரும்பியே போற்றி
  78. ஓம் காகம் ஏறுபவனே போற்றி
  79. ஓம் மேற்புறம் இருப்பவனே போற்றி
  80. ஓம் மந்த கதியானே போற்றி
  81. ஓம் எள் பிரியனே போற்றி
  82. ஓம் ஏற்றம் தருபவனே போற்றி
  83. ஓம் தன்னிகர் அற்றவனே போற்றி
  84. ஓம் தளைகள் உடைப்பவனே போற்றி
  85. ஓம் ராகு பகவானே போற்றி
  86. ஓம் ரட்சிப்பவனே போற்றி
  87. ஓம் சிரம் இழந்தவனே போற்றி
  88. ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
  89. ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
  90. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
  91. ஓம் பாதி உடலோனே போற்றி
  92. ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
  93. ஓம் தென்மேற்கு அமர்ந்தவனே போற்றி
  94. ஓம் ஆடேறி வருபவனே போற்றி
  95. ஓம் கேது பகவானே போற்றி
  96. ஓம் கேடறச் செய்பவனே போற்றி
  97. ஓம் செம்மேனியனே போற்றி
  98. ஓம் சிம்ம வாகனனே போற்றி
  99. ஓம் திங்களின் பகையே போற்றி
  100. ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
  101. ஓம் சுக்கிர மித்திரனே போற்றி
  102. ஓம் சூல் காப்பவனே போற்றி
  103. ஓம் அலி உருவானவனே போற்றி
  104. ஓம் அரவத் தலையோனே போற்றி
  105. ஓம் வடமேற்கில் இருப்பவனே போற்றி
  106. ஓம் கொள்ளு விரும்பியே போற்றி
  107. ஓம் நவக்கிரக நாயகர்களே போற்றி
  108. ஓம் சூரியானாதி தேவர்கள் போற்றி போற்றி


Saturday, March 30, 2024

SUDARSHANA MAHA MANTRA lyrics in tamil - 108 names of sudharsana - சுதர்சன மகா மந்திரத்தின்

ஸ்ரீ சுதர்சன மந்திரம் 


சுதர்சன காயத்ரி மந்திரம்:

ஓம் சுதர்ஹநாய வித்மஹே!!
மஹாஸ்வாலாய தீமஹி!!
தன்னோ சக்ரஹ்: ப்ரசோதயாத்!

ஸூதர்ஸநாய வித்மஹே 
ஜ்வாலா - சக்ராய தீமஹி 
தன்னோ: சக்ர: ப்ரசோதயாத்!

சுதர்சனர் மூல மந்திரம்:

ஓம் ஸ ஹ ஸ்ரா ர ஹூம் பட்!

மகா சுதர்சன மந்திரம்:

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய
ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய
பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர
ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி

ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய
மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே
ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபனா
கராய ஹூம்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா

(மிகவும் சக்தி வாய்ந்த இந்த மகா சுதர்சன மந்திரத்தை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விட்டு, சுத்தமான ஆடை உடுத்தி, கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்களை மூடி குறைந்த பட்சம் ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். 108 முறை உச்சரிப்பது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும். அனைத்து விதமான நன்மைகளையும் தரும். அஞ்ஞானம் விலகி, ஞானம் பிறக்கும்.)

108 சுதர்சனர் நாமங்கள்:

  1. ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி
  2. ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி
  3. ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
  4. ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
  5. ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
  6. ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
  7. ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
  8. ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
  9. ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
  10. ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி!!
  11. ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
  12. ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
  13. ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
  14. ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
  15. ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
  16. ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
  17. ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
  18. ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
  19. ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
  20. ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி!!
  21. ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
  22. ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
  23. ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
  24. ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
  25. ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
  26. ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
  27. ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
  28. ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
  29. ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
  30. ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி!!
  31. ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
  32. ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
  33. ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
  34. ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
  35. ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
  36. ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
  37. ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
  38. ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
  39. ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
  40. ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி!!
  41. ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
  42. ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
  43. ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி
  44. ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
  45. ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
  46. ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
  47. ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
  48. ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
  49. ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
  50. ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி!!
  51. ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
  52. ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி
  53. ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
  54. ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
  55. ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
  56. ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
  57. ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
  58. ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
  59. ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
  60. ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி!!
  61. ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
  62. ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
  63. ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
  64. ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
  65. ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
  66. ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
  67. ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
  68. ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
  69. ஓம் மஹா வீரரே போற்றி
  70. ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி!!
  71. ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
  72. ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
  73. ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
  74. ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
  75. ஓம் சிவப்ரியரே போற்றி
  76. ஓம் மஹா பலரே போற்றி
  77. ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
  78. ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
  79. ஓம் மஹா சூரரே போற்றி
  80. ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி!!
  81. ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
  82. ஓம் தர்மராஜரே போற்றி
  83. ஓம் சமத்துவமுடையவரே போற்றி
  84. ஓம் தண்டதரரே போற்றி
  85. ஓம் தபஸ்வியே போற்றி
  86. ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
  87. ஓம் சர்வக்ஞரே போற்றி
  88. ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
  89. ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
  90. ஓம் மிக பயங்கர வாதியே போற்றி!!
  91. ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி
  92. ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
  93. ஓம் பாவிகளின் எமனே போற்றி
  94. ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
  95. ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
  96. ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
  97. ஓம் கோரமானவரே போற்றி
  98. ஓம் பயங்கரரே போற்றி
  99. ஓம் திருப்தியுற்றவரே போற்றி
  100. ஓம் ஸம்ஹாரியே போற்றி!!
  101. ஓம் குளிரச் செய்பவரே போற்றி
  102. ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
  103. ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
  104. ஓம் பதினாறு வகை ஆயுதங்கள் உடையவரே போற்றி
  105. ஓம் நரசிம்ப மூர்த்தியின் நகங்கலாக இருந்தவரே போற்றி
  106. ஓம் மஹா சக்தியின் திரிசூலமே போற்றி
  107. ஓம் அமைதியை வழங்குபவரே போற்றி
  108. ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்ஸனரே போற்றி போற்றி

Kaligambal Kavasam lyrics in tamil - காளிகாம்பாள் கவசம்

காளிகாம்பாள் கவசம் - மங்களம் தரும் ஸ்ரீ காளிகாம்பாள் கவசம்

(காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும்.)

ஸ்ரீ காளிகாம்பாள் திருவடிகளே துணை !

முழு முதற் கடவுளே மூஷிக வாகனனே
முக்கண்ணன் புதல்வனே மோதகப்ரியனே
பார்வதி மைந்தனே பாலனின் சோதரனே
பார்புகழ் நாயகனே பாடினேன் உனையே

காட்டின் இருளிலும் கனிவுடன் துணைவரும்
காளிகாம்பாள் கவசம் பாடவே முனைந்தேன்
கருத்தும் பொருளும் தெளிவுடன் அமைந்திட
காத்தருள்வாயே கற்பக கணபதியே

அருள்மிகு அம்பிகையின் அருள்பாதம் பணிந்தேன்
ஆனந்த ஜோதியே ஆதரிப்பாய் எமையே
இகபர சௌபாக்கியம் அளித்ததிடும் தேவியே
ஈரேழுலகமும் காத்திடும் அன்னையே

உலகம் உய்யவே உலகில் உதித்தவளே
ஊழ்வினையைத்தீர்த்து உண்மையைக்காப்பவளே
எங்கும் நிறைந்தவளே ஏகாந்த நாயகியே
ஏற்ற மிகு வாழ்வளிக்கும் எழில்மிகு அம்பிகையே

ஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே
ஒன்றும் அறியாதவரை உயர்வடையச் செய்பவளே
ஓங்கார நாயகியே ஓம் சக்தித்தாயே
ஔடதமாய் நீ இருந்து அனைவரையும் காத்திடுவாய்

அகிலாண்ட நாயகியே ஆதிபராசக்தியே
அல்லல்கள் போக்கிடும் அபிராமி அன்னையே
கண்கண்ட தெய்வமே கருணையின் வடிவமே
கலியுகம் காக்கவே காட்சியளிப்பவளே

காளிகாம்பாள் எனும் காமாட்சித்தாயே
கமடேஸ்வரருடன் காட்சி தருபவளே
பாரதிபாடிய பரமகல்யாணியே
வீரமிகு சிவாஜிக்கு வீரத்தைக் கொடுத்தவளே

வெற்றித்திருமகளே வேண்டியவரமருள்பவளே
பெற்ற அன்னையாய்ப் பேணிக்காப்பவளே
பன்னிரு தலங்களில் காமாட்சி எனும் நாமமுடன்
மின்னும் ஒளியாய்க்காட்சி தருபவளே

சென்னைப்பதியில் சீருடன் அமர்ந்து
சென்னியம்மன் எனும் நாமமும் கொண்டவளே
எங்கும் நிறைந்திருந்து எமபயம்நீக்கிடுவாய்
எல்லையில்லா பேரின்பப் பெருவாழ்வு தந்திடுவாய்

குங்குமத்தில் குடியிருந்து குடும்பத்தைக்காத்திடுவாய்
சங்காபிஷேகத்தில் மகிழ்ந்து சந்ததியைக்காத்திடுவாய்
சத்தியமாய் இருப்போர்க்கு சாட்சியாய் இருந்திடுவாய்
வித்தைகள் கற்போர்க்கு விளக்கம் தந்திடுவாய்

கரும்பேந்திய கையினளே கண்ணினைக்காத்திடுவாய்
விரும்பியே வருவோர்க்கு வீரத்தை அளித்திடுவாய்
நின்பாதம் பணிவோர்க்கு நிம்மதியைக்கொடுத்திடுவாய்
பன்மலரால் பூஜிப்போர்க்கு பக்கபலமாய் இருந்திடுவாய்
மஞ்சளில் குடியிருந்து மாங்கல்யம் காத்திடுவாய்

நெஞ்சில் நிறைந்திருந்து நெஞ்சத்தைக்காத்திடுவாய்
நம்பியே வருவோர்க்கு நல்லதே செய்திடுவாய்
தெம்பில்லாதவர்க்கு தெய்வபலம் அளித்திடுவாய்
வம்பு பேசுவோரையும் வரமளித்துக்காத்திடுவாய்
கும்பிடவருவோரின் குறைகளைக்களைந்திடுவாய்

பாமாலை சூட்டுவோர்க்கு பூமாலை சூட்டிடுவாய்
காமாலை நோயையும் கடிதே போக்கிடுவாய்
ஆடிவருவோர்க்கு ஆறுதல் தந்திடுவாய்
தேடி வருவோர்க்குத் தைரியத்தை அளித்திடுவாய்

வாடி வருவோரின் வ்றுமையைபோக்கிடுவாய்
நாடிவருவோர்க்கு நன்மையே புரிந்திடுவாய்
பாடி வருவோரின் பாரத்தை போக்கிடுவாய்
கூடிவருவோர்க்குக் குலவிலக்க்காயய்த்திகழ்ந்திடுவாய்

காளிகாம்பாள் கவசம் ஒதுவோர்க்கேல்லாம்
கஷ்டங்கள் ஒழியுமே கவலைகள் தீருமே
அஷ்டமா சித்தியும் அடைந்திடச்செய்யுமே
நஷ்டம் என்பதே எதிலும் வாராமல்
இஷ்டமுடன் இனிமையாய் வாழ்ந்திடச்செய்யுமே

போற்றி போற்றி ஜகத் ரக்ஷகியே போற்றி
போற்றி போற்றி கற்பகவல்லியே போற்றி
போற்றி போற்றி அங்கயற்கண்ணியே  போற்றி
போற்றி போற்றி மூகாம்பிகை அன்னையே போற்றி

ஓம் சக்தி; ஓம்சக்தி; ஓம்சக்தி ஓம்;
நற்பவி நற்பவி நற்பவி ஓம்;

ஸ்ரீ காளிகாம்பாள் திருவடிகளே துணை !

Kaligambal kavasam lyrics in English

 Kaligambal kavasam

Sri Kalikambal thiruvadigale sharanam!

Muzhu Mudhar Kadavule Mooshika Vahanane
Mukkannan pudhalvane, Modhaka priyane
Parvathi mainthane, Balanin sodharane
Paar pugazh naayagane Paadinen Unnaye.   

Kaattin irulilum kanivudan thunai varum
Kaalikaambaal kavacham Paadave munainthen
Karuththum porulum thelivudan amainthida
Kaatharulvaaye Karpaga Ganapathiye.

Arul migu ambigayin arul paadham paninthen
Ananda jothiye aadharippai yemmaye
Iga para sowbhagyam alithidum deviye,
Eerezhu ulagamum kaathidum annaye.

Ulagam uyyave ulagil udhithavale
OOzh vinaiyai theerthu unmaiyai kaappavale
Yengum nirainthavale, yekaantha nayagiye
Yettra migu vaazhvalikkum, yezhil migu ambigaye.

Iynthozhil purinthidum ayyanin deviye
Ondrum ariyaathavarai uyarvadaya cheipavale
Omkara Nayakiye, Om sakthi thaaye
Oudathamai nee irunthu anaivarayum kaathiduvaai.

Akhilanda Nayagiye, Aadhi paraa sakthiye
Allalgal pokkidum Abhirami Annaye
Kan Kanda devivame, karunayin vadivame
Kaliyugam kaakkave katchiyalippavale.

Kaalikaambal yenum Kamakshi Thaaye
Kamadeswararudan kaatchi tharupavale
Bharathi paadiya parama Kalyaaniye
Veera migu shivajikku veeraththai koduthavale.

Vetri thirumagale, vendiya varam arulbavale
Pettra annaiyaai peni kaappavale
Panniru thalangalil, Kamakshi yenum naamamudan,
Minnum oliyai Katchi tharubavale.

Chennai pathiyil seerudan amarnthu
Chenniyamman yenum namamum kondavale
Yengum nirainthirunthu yema bhayam neekkiduvai,
Yellayillaa perinba peru vaazhvu thanthiduvai.

Kumkumathil kudi yirunthu kudumbathai kaathiduvai
Sanghabishekathil magizhnthu, santhathiyai kaathiduvai
Sathiyamaai irupporkku saakshiyaai irunthiduvai
Vithaigal karpporkku vilakkam thanthiduvai.

Karumbenthiya kayyinale, kanninai  kaathiduvai
Virumbiye  varuvorkku, veerathai alithiduvai
Nin paadham panivorkku nimmathiyai koduthiduvaai
Pan malaral poojipoorkku pakka balamai irunthiduvai
Manjalil   kudiyirunthu maangalyam kaathiduvaai.

Nenjinil nirainthirunthu, nenjaththai kaathiduvai
Nambiye varuvorkku, nallathe seithiduvai
Thembillathavarkku, deiva balam alithiduvai
Vambu pesuvoraiyum, varamalithu kaathiduvai
Kumbida varuvorin kurigalaiyum kalainthiduvai.

Paamaalai choootuvorkku, poomalai choottiduvai
Kamalai noyaiyum kadithe pokkiduvai
Adi varuvorkku aaruthal thanthiduvai
Thedi varuvorkku, dairiyathai alithiduvai.

Vaadi varuvorin varumayai pokkiduvai
Naadi varuvorkku nanmaiye purinthiduvai
Paadi varuvorin baraththai pokkiduvai
Koodi varuvorkku kula vilakkai thigazhnthiduvai.

Kalikambaal kavasam othuvorkkellam,
Kashtangal ozhiyume, kavalaigal theerume
Ashtama siddhiyum adainthida seiyume
Nashtam yenpathe yethilum vaaraamal
Ishtamudan inimaiyai vaazhnthida seiyume.

Potri potri Jagath Rakshagiye potri
Potri potri Karpaga-valliye potri
Potri potri angayarkanniye potri
Potri potri Mookambigai annaiye potri.

Om Sakthi; Om Sakthi; Om Sakthi Om;
Narbhavi Narbhavi Narbhavi Om;

Sri Kalikambal thiruvadigale sharanam!


Thursday, March 28, 2024

Sathru Samhara Vel Pathigam in tamil

சத்ரு சம்ஹார  வேல் பதிகம்

வேலும் மயிலும் துணை!!!

காப்பு

சண்முகக் கடவுள் போற்றி
சரவணத்துதித்தாய் போற்றி
கண்மணி முருகா போற்றி
கார்த்திகை பாலா போற்றி
தண்மலர்க் கடப்பமாலை
தாங்கிய தோளா போற்றி
விண்மதி வதன வள்ளி
வேலவா போற்றி போற்றி

நூல்

அப்பமுடன் அதிரசம் பொரிகடலை
துவரைவடை அமுதுசெய் இபமுகவனும்
ஆதி கேசவன் லட்சுமி திங்கள்
தினகரன் ஐராவதம் வாழ்கவே!
முப்பத்து முக்கோடி வானவர்கள்
இடர் தீர முழுது பொன்னுலகம் வாழ்க!
மூவரோடு கருட கந்தருவர் கிம்புருடரும்
முது மறைக்கிழவர் வாழ்க!
செப்பரிய இந்திரன் தேவி அயிராணிதன்
திரு மங்கலம் வாழ்கவே!
சித்தவித்யாதரர் கின்னரர்கள்
கனமான தேவதைகள் முழுதும் வாழ்க!
சப்த கலை விந்துக்கும் ஆதியாம் அதிரூப
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   1

சித்தி சுந்தரி கௌரி அம்பிகை க்ருபாநிதி
சிதம்பரி சுதந்தரி பரசிற்பரி
சுமங்கலி நிதம்பரி விடம்பரி
சிலாசுத விலாஸ விமலி
கொத்து திரிசூலி திரிகோணத்தி
ஷட்கோண குமரி கங்காளி ருத்ரி
குலிச ஓம்காரி ரீம்காரி ஆங்காரி
ஊங்காரி, ரீங்காரி அம்பா
முத்தி காந்தாமணி முக்குண
துரந்தரி மூவர்க்கு முதல்வி
ஞான முதுமறைக் கலைவாணி அற்புத
புராதனி மூவுலகும் ஆன சோதி!
சத்தி சங்கரி நீலி கமலி பார்வதி தரும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   2

[36 சக்தியின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சக்தியின் அருள் முழுதும் உண்டு]

மூரியுள முப்பத்து முக்கோடி
தேவரும் முனிவரோடும் அசுரர் கூடி
முழுமந்த்ர கிரி தன்னைமத்தாகவே
செய்து முற்கணத்து அமுது பெறவே
கோரமுள வாசுகியின் ஆயிரம்
பருவாயில் கொப்பளித்திடு விடங்கள்
கோளசையும் மண்டலங்கள் யாவையும்
எரித்திடும் கொடிய அரவினைப்பிடித்து
வீரமுடன் வாயினால் குத்தி
உதிரம் பரவ இரு தாளிலே மிதித்து
விரித்துக் கொழும் சிறகடித்தே எடுத்து உதறும்
விதமான தோகைமயில் சாரியாய்
தினமேறி விளையாடி வரும் முருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   3

உக்ரமுள தாருகன் சிங்கமா சூரனும்
உன்னுதற்கு அரிய சூரன்
உத்தி கொளும் அக்னிமுகன் பானுகோபன்
முதல் உத்தண்ட அசுரர் முடிகள்
நெக்குவிட கரி புரவி தேர்கள்
வெள்ளம் கோடி நெடிய பாசங்கள் கோடி
நிறையிலா வஸ்திரம் வெகுகோடிகள்
குருதி நீரில் சுழன்று உலவவே
தொக்குத் தொகுத் திதி திதிமி டுண்டு டுடு
டகுகுடிகு துந்துமி தகு குதி திகுதை
தோத்திமி டங்கு குகு டிங்கு குகு
சங்குகென தொந்தக் கவந்தம் ஆட
சக்ரமொடு சக்திவிடு தணிகை சென்னியில் வாழும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   4

அந்தியில் பேச்சி உறுமுனி காட்டேரி
அடங்காத பகல் இரிசியும்
அகோர கண்டம் கோர கண்ட சூன்யம்
பில்லி அஷ்ட மோஹினி பூதமும்
சந்தியான வசுக்குட்டி, சாத்தி
வேதாளமும் சாகினி இடாகினிகளும்
சாமுண்டி பகவதி ரத்தக்காட்டேரி
முதல் சஞ்சரித்திடு முனிகளும்
சிந்தை நொந்தலறி திரு வெண்ணீறுகாணவே
தீயிலிடும் மெழுகுபோல
தேகமெல்லாம் கருகி நீறாகவே நின்று
சென்னியிரு தணிகை மலையில்
சந்ததம் கலியாண சாயுஜ்ய பதம் அருளும்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   5

கண்டவிட பித்தமும் வெப்புத் தலைவலி
இருமல் காமாலை சூலை,
குஷ்டம், கண்ட மாலை,
தொடைவாழை வாய்ப்
புற்றினொடு கடினமாம் பெருவியாதி
அண்டொணாதச் சுரஞ் சீதவாதச்சுரம்
ஆறாத பிளவை குன்மம்
அடங்காத இரு பஃது மேகமுடன்நால்
உலகத்தி லெண்ணாயிரம் பேர்
கொண்டதொரு நோய்களும்
வேலென்றுரைத்திடக் கோவென ஓலமிட்டுக்
குலவுதினகரன்முன் மஞ்சுபோல்
நீங்கிடும் குருபரன் நீறணிந்து,
சண்டமாருத கால உத்தண்ட கெம்பீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   6

மகமேரு உதயகிரி அஸ்திகிரியும்
சக்ரவாளகிரி நிடதவிந்தம்,
மா உக்ரதர நர சிம்மகிரி யத்திகிரி
மலைகளொடும் அதனை சுமவா
ஜெகமெடுத் திடும்புட்ப தந்தம்
அயிராவதம் சீர்புண்டரீகக் குமுதம்
செப்பு சாருவ பூமம் அஞ்சனம்
சுப்பிர தீபம் வாமனம் ஆதி வாசுகி
மகா பதுமன் ஆனந்த கார்க் கோடகன்
சொற் சங்கபாலன் குளிகன்
தூய தக்கன் பதும சேடனோடு
அரவெலாம் துடித்துப் பதைத்து அதிரவே
தகதகென நடனமிடு மயிலேறி விளையாடுஞ்
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   7

திங்கள் பிரமாதியரும் இந்திராதி
தேவரும் தினகரரும் முனிவரொடு
சித்திரா புத்திரர் மௌலி அகலாமல்
இருபாதஞ் சேவித்து நின்று தொழவும்
மங்கைதிரு வாணியும் அயிராணியோடு
சத்த மாதர் இருதாள் பணியவும்
மகதேவர் செவிகூறப் பிரணவம் உரைத்திட
மலர்ந்த செவ்வாய்கள் ஆறும்
கொங்கை களபம் புனுகு சவ்வாது
மணவள்ளி குமரி தெய்வானையுடனே
கோதண்டபாணியும் நான்முகனுமே
புகழ் குலவுதிருத்தணிகை மலைவாழ்,
சங்குசக்கர மணியும் பங்கயக்கரன் மருக
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   8

மண்டலம் பதினாலு லோகமும்
அசைந்திட வாரிதி ஓரேழும் வறள
வலிய அசுரர் முடிகள் பொடிபடக்
கிரவுஞ்ச மாரியெழத் தூளியாகக்
கொண்டல்நிற மெனும் அசுரர் அண்டங்கள்
எங்குமே கூட்டமிட்டு ஏக
அன்னோர் குடல் கைகாலுடன் மூளை தலைகள்
வெவ்வேறாகக் குத்திப் பிளந்தெறிந்து
அண்டர்பணி கதிர்காமம் பழநி
சுப்பிரமணியம் ஆவினன் குடி ஏரகம்,
அருணாசலம், கயிலை தணிகைமலை
மீதிலுறை அறுமுகப் பரம குருவாம்,
சண்டமாருதக் கால சம்மார அதிதீர
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   9

மச்சங் குதித்துநவமணி தழுவ
வந்தநதி வையாபுரிப் பொய்கையும்
மதியம் முத்தம் செய்யும் பொற்கோபுரத்து
ஒளியும் வான்மேவு கோயிலழகும்,
உச்சிதமதானதிரு ஆவினன் குடியில்
வாழ் உம்பரிட முடிநாயக,
உக்ரமயிலேறிவரும் முருக சரவணபவ!
ஓங்காரசிற் சொரூபவேல்,
அச்சுத க்ருபாகரன் ஆனைமுறை
செய்யவே ஆழியை விடுத்து ஆனையை,
அன்புடன் ரட்சித்த திருமால் முகுந்தன்
எனும் அரிகிருஷ்ண ராமன் மருகன்,
சச்சிதானந்த பரமானந்த சுரர் தந்த
சரஹணனை நம்பினவர்மேல்
தர்க்கமிட நாடினரைக் குத்தி
எதிராடிவிடும் சத்ரு சங்கார வேலே!   10

சத்ரு சங்கார வேற் பதிகம் முற்றிற்று!

வேலும் மயிலும் துணை!!!


Samayapuram Mariamman 108 Potri in Tamil

சேலம் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி

இன்னல்கள் நீங்க இன்பங்கள் பெருக அன்னையை வேண்டுவோம். இன்னல்கள் நீங்க.. இன்பங்கள் பெருக..

ஓம் சக்தி ஓம்!!!

  • ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
  • ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
  • ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
  • ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி
  • ஓம் ஆதார சக்தியே போற்றி
  • ஓம் ஆதி பராசக்தியே போற்றி
  • ஓம் இருள் நீக்குபவளே போற்றி
  • ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
  • ஓம் இடரைக் களைவாய் போற்றி
  • ஓம் இஷ்ட தேவதையே போற்றி
  1. ஓம் அம்மையே போற்றி
  2. ஓம் அம்பிகையே போற்றி
  3. ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
  4. ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
  5. ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
  6. ஓம் பூமாரித்தாயே போற்றி
  7. ஓம் பூவில் உறைபவளே போற்றி
  8. ஓம் பூஜைக்குரியவளே போற்றி
  9. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
  10. ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
  11. ஓம் மழைவளம் தருவாய் போற்றி
  12. ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி
  13. ஓம் மந்திர வடிவானவளே போற்றி
  14. ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
  15. ஓம் செந்தூர நாயகியே போற்றி
  16. ஓம் செண்பகாதேவியே போற்றி
  17. ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
  18. ஓம் சொல்லின் செல்வியே போற்றி
  19. ஓம் ஈகை மிக்கவளே போற்றி
  20. ஓம் உமையவளே தாயே போற்றி
  21. ஓம் அம்மையே போற்றி
  22. ஓம் அம்பிகையே போற்றி
  23. ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
  24. ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
  25. ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
  26. ஓம் பூமாரித்தாயே போற்றி
  27. ஓம் பூவில் உறைபவளே போற்றி
  28. ஓம் பூஜைக்குரியவளே போற்றி
  29. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
  30. ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
  31. ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
  32. ஓம் ஈடிணை இலாளே போற்றி
  33. ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
  34. ஓம் ஏழையர் அன்னையே போற்றி
  35. ஓம் ஐங்கரத்தவளே போற்றி
  36. ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
  37. ஓம் ஓங்கார ரூபினியே போற்றி
  38. ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
  39. ஓம் கவுமாரித்தாயே போற்றி
  40. ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
  41. ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
  42. ஓம் காக்கும் அன்னையே போற்றி
  43. ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
  44. ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
  45. ஓம் குங்கும நாயகியே போற்றி
  46. ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
  47. ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
  48. ஓம் கை கொடுப்பவளே போற்றி
  49. ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
  50. ஓம் சக்தி உமையவளே போற்றி
  51. ஓம் சவுந்தர நாயகியே போற்றி
  52. ஓம் சித்தி தருபவளே போற்றி
  53. ஓம் சிம்ம வாகினியே போற்றி
  54. ஓம் சீரெலாம் தருபவளே போற்றி
  55. ஓம் சீதளா தேவியே போற்றி
  56. ஓம் சேனைத் தலைவியே போற்றி
  57. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
  58. ஓம் தத்துவ நாயகியே போற்றி
  59. ஓம் தர்ம தேவதையே போற்றி
  60. ஓம் தரணி காப்பாய் போற்றி
  61. ஓம் தத்துவ நாயகியே போற்றி
  62. ஓம் தர்ம தேவதையே போற்றி
  63. ஓம் தரணி காப்பாய் போற்றி
  64. ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
  65. ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
  66. ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
  67. ஓம் தீமை களைபவளே போற்றி
  68. ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
  69. ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
  70. ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
  71. ஓம் தேசமுத்து மாரியே போற்றி
  72. ஓம் தையல் நாயகியே போற்றி
  73. ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
  74. ஓம் தோன்றாத் துணையே போற்றி
  75. ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
  76. ஓம் மழலை அருள்வாய் போற்றி
  77. ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
  78. ஓம் மாணிக்க வல்லியே போற்றி
  79. ஓம் மகமாயித் தாயே போற்றி
  80. ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
  81. ஓம் முத்தாலம்மையே போற்றி
  82. ஓம் முத்து நாயகியே போற்றி
  83. ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
  84. ஓம் நாக வடிவானவளே போற்றி
  85. ஓம் நாத ஆதாரமே போற்றி
  86. ஓம் நாகாபரணியே போற்றி
  87. ஓம் நானிலம் காப்பாய் போற்றி
  88. ஓம் நித்ய கல்யாணியே போற்றி
  89. ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
  90. ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
  91. ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி
  92. ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
  93. ஓம் நேசம் காப்பவளே போற்றி
  94. ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
  95. ஓம் பவளவாய் கிளியே போற்றி
  96. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
  97. ஓம் பசுபதி நாயகியே போற்றி
  98. ஓம் பாம்புரு ஆனாய் போற்றி
  99. ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
  100. ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
  101. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
  102. ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
  103. ஓம் பீடை போக்குபவளே போற்றி
  104. ஓம் வீரபாண்டி வாழ்பவளே
  105. ஓம் புத்தி அருள்வாய் போற்றி
  106. ஓம் புவனம் காப்பாய் போற்றி
  107. ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
  108. ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருவடிகளே சரணம்!
வையகம் வாழ்விப்பாய் தாயே!
ஓம் சக்தி ஓம்! சர்வம் ஸ்ரீ சக்தி மயம்!

Navagraha Stotram lyrics in Tamil - நவக்ரஹ ஸ்தோத்ரம்

நவக்ரஹ ஸ்தோத்ரம்

நவக்ரஹ த்யான ஶ்லோகம்

ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாய ச ।
குரு சுக்ர சனிப்யஶ்ச ராஹவே கேதவே நம: ॥

சூரியன்:

ஜபாகுஸும ஸங்காஶம் காஶ்யபேயம் மஹாத்யுதிம் ।
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம் ॥

சந்திரன்:

ததிஶங்க துஷாராபம் க்ஷீரார்ணவ ஸமுத்பவம் (க்ஷீரோதார்ணவ ஸம்பவம்) ।
நமாமி ஶஶினம் ஸோமம் ஶம்போர்-மகுட பூஷணம் ॥

செவ்வாய்:

தரணீ கர்ப ஸம்பூதம் வித்யுத்கான்தி ஸமப்ரபம் ।
குமாரம் ஶக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம் ॥

புதன்:

ப்ரியங்கு கலிகாஶ்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம் ।
ஸௌம்யம் ஸௌம்ய (ஸத்வ) குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம் ॥

குரு:

தேவானாம் ச ருஷீணாம் ச குரும் காஞ்சனஸன்னிபம் ।
புத்திமன்தம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் ॥

சுக்ரன்:

ஹிமகுன்த ம்ருணாளாபம் தைத்யானம் பரமம் குரும் ।
ஸர்வஶாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம் ॥

சனி:

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் ।
சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஶனைஶ்சரம் ॥

ராகு:

அர்தகாயம் மஹாவீரம் சன்த்ராதித்ய விமர்தனம் ।
ஸிம்ஹிகா கர்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் ॥

கேது:

பலாஶ புஷ்ப ஸங்காஶம் தாரகாக்ரஹமஸ்தகம் ।
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் ॥

பல ஶ்ருதி:

இதி வ்யாஸ முகோத்கீதம் ய: படேத்ஸு ஸமாஹித: ।
திவா வா யதி வா ராத்ரௌ விக்னஶான்தி-ர்பவிஷ்யதி ॥
நரனாரீ-ன்ருபாணாம் ச பவே-த்து:ஸ்வப்ன-னாஶனம் ।
ஐஶ்வர்யமதுலம் தேஷாமாரோக்யம் புஷ்டி வர்தனம் ॥
க்ரஹனக்ஷத்ரஜா: பீடாஸ்தஸ்கராக்னி ஸமுத்பவா: ।
தாஸ்ஸர்வா: ப்ரஶமம் யான்தி வ்யாஸோ ப்ரூதே ந ஸம்ஶய: ॥

இதி வ்யாஸ விரசிதம் நவக்ரஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।


Wednesday, March 27, 2024

Sivasakthi Andhathi Lyrics in Tamil - சிவசக்தி அந்தாதி

சிவசக்தி அந்தாதி

சிவன்  பார்வதி தேவிக்கு உகந்த இந்த சிவசக்தி அந்தாதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.

நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன்
கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே
பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட
நற்றுணையாய் வா நர்த்தன கணபதி

மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென்
கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய்
இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில்
நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே

கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட
மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட
மலையுறை ஈசனும் மலருறை அயனும்
அலைகடல் அரங்கனும் களிப்பினில் மூழ்கவே.   1

மூழ்கிய மலைதனை முதுகினில் தாங்கிய
ஆழ்கடல் அனந்தனின் அழகிய சோதரி
ஏழ்கடல் நடுங்கிடச்செய்திட்ட அசுரரை
வீழ்ந்திடச்செய்த ஸ்ரீ லலிதா தேவியே.   2

தேவி நின் திருவடி அடைந்தே இப்பார்
மேவிய தேவரும் நலம் பல பெற்றனர்
காவியத்தளைவியாம் காமாட்சி அம்மையே
ஓவியந்தனிலே உமையே படைத்தேன்.   3

படைக்கும் பிரமனுக்கும் காக்கும் மாலுக்கும்
கிடைக்காச்சோதியாய் மலைதனில் ஒளிர்ந்து
விடைக்கண் மேவிய விமலன் தேவி நின்
கடைக்கண் அருளை அடைந்தனர் பலரே.   4

பலவாகி ஒன்றாகி ஒன்றுக்குள் அணுவாகி
அலகிலா அழகுடை அபிராமி வல்லியே
நிலமிசை வாழ்ந்திட்ட அபிராமி பட்டர்க்கு
நிலவிலா நாளிலே நிலவினைக்காட்டினாய்.   5

காட்டிய மதியினை ஒத்த முகத்தினள்
தீட்டிடும் மையினை ஒத்த குழலினள்
ஊட்டிய அமுதை உண்ட சம்பந்தர்
ஈட்டினர் இறையருள் இசைந்து பாடவே.   6

பாடல் வல்லவர் கூடும் மூதூர்
கூடல் மாநகர் கோவின் பாவாய்
கோடல் முத்தினைக் குருபரர்க்கு அளித்த
ஆடல் அழகியே அங்கயர்க் கண்ணியே.   7

கண்ணின் மணியே மணியின் ஒளியே
விண்ணில் பறந்த வீரமாகாளியே
மண்ணை உண்ட கண்ணனின் சோதரி
எண்ணும்போதே என்னுள் உறைவாய்.   8

உறைபனி நிறைந்திடும் மலைதனில் உறையும்
பிறைமதி அணிந்த பெம்மான் தேவியே
நிறைமணி விழாவினை விரும்பிடும் அன்னையே
குறைதனைத்தீர்த்திடும் குமரி நங்கையே.   9

நங்கையின் நயனங்கள் நல்கும் அன்பினால்
பொங்கிடும் மங்களம் எங்கும் திண்ணமே
கங்கையைத்தரித்திடும் ஈசனின் சிவையே
பங்கயச்செல்வி நின் பதமலர் பணிந்தேன்.   10

பணிந்தே பெற்றனன் மந்திர உபதேசம்
துணிந்தே உண்டனன் ஆலால விடந்தனை
தணிந்தே நிறுத்தினை விடந்தனைக்கண்டத்தில்
பணிந்தே ஏத்துவர் பலரும் நின் அடியினை.   11

அடியேன் துயருறும் நேரத்தில் எல்லாம்
கடிதினில் வந்தெமைக்காத்திடும் ஈஸ்வரி
இடியென இன்னல்கள் வந்திடும் போழ்திலும்
வடிவுடை நாயகி காத்தே அருள்வாய்.   12

அருள்மழை பொழிந்திடும் அகிலாண்ட நாயகி
கருணைமழை பொழிந்திடும் காமாட்சி தேவியே
ஞானமழை பொழிந்திடும் சரஸ்வதி தேவியே
கனகமழை பொழிந்திடும் லட்சுமியும் நீயே.   13

நீயே கதியென நினைத்திடும்போதே
தாயே வந்து நீ தயைபுரிந்திடுவாய்
சேயேன் எனை நீ மறந்தே விடினும்
ஓயேன் உந்தன் மலரடி துதிப்பதை.   14

துதி செய்திடவே (குரு) சங்கரர் அமைத்த
பதியாம் கொல்லூர் அதனில் பாயும்
நதியாம் சௌபர்ணிகைக் கரையில்
மதியென ஒளிர் மூகாம்பிகைத்தாயே.   15

தாயாய் வந்தே தரிசனம் தந்தாய்
மாயாப்பிறவியை மாய்த்திடச்ச்செய்வாய்
சேயாய்ப்பிறந்தாய் இமயமலையிலே
பேயாய்த்திரிவோரை அடக்கிடவேன்றே.   16

வென்றிடும் எண்ணத்தில் வந்த அசுரரைக்
கொன்றே குவித்தாய் குவலயந்தனிலே
நன்றியாய் தேவரும் பூமாரி பொழிந்திட
குன்றினில் அமர்ந்தாய் சாமுண்டி அன்னையே.   17

அன்னை பராசக்தி அருளுள்ளம் கொண்டுநீ
தென்னைகமுகு நிறை தஞ்சை நகரிலே
புன்னை நல்லுரிலே பொலிவுடன் அமர்ந்தே
என்னை ரட்சிப்பாய் முத்து மாரியே.   18

மாரியே பொய்ப்பினும் தான் என்றும் பொய்யாது
வாரியே வழங்கிடும் வண்டார் குழலியே
காரிருள் தன்னிலும் காத்திடும் நீயே
தேரினில் வருவாய் கருமாரி அம்மையே.   19

அம்மையே என்று அழைத்திடும் போதிலே
வெம்மை நோயையும் தணிந்திடச்செய்வாய்
செம்மை நிறம் தனை விரும்பிடும் தேவியே
உம்மை என்றுமே உறுதியாய்ப் பற்றினேன்.   20

பற்றிடும் வேளையில் பகலவனாய் வந்து
சுற்றமும் சுகமாய் வாழ்ந்த்திடச்செய்வாய்
கற்றிடும் யாவர்க்கும் கல்வியைக்கொடுத்திடு
நற்றமிழ் வாணியே லலித கலா மயிலே.   21

மயிலாய்த் தோன்றி பூஜைகள் செய்தே
கயிலாயம் உறை ஈசனை மணந்து
மயிலாபுரியுறை மங்கயர்க்கரசியே
ஒயிலாய் வருவாய் கற்பகவல்லியே.   22

வல்வினை நல்வினை ஆக்கிடும் தேவியே
மெல்லிடை மங்கையே தண்மதி அணிந்தே
கல்லினுட் தேரைக்கும் கனிவாய் அமுதூட்டும்
செல்வி நின் கருணைக்கு எல்லை இல்லையே.   23

எல்லை இல்லாத எழில் மிகு ஈஸ்வரி
வில்லையொத்த புருவமுள்ளவள்
தில்லைக்கூத்தனின் சிவகாம சுந்தரி
நெல்லையில் வாழ் காந்திமதியே.   24

மதியணி பிரானின் மனங்குளிர் நாயகி
பதியுடன் ரிடபத்தில் பவனி வரும் உனை
கதியென நினைக்கும் மானிடர் பலரின்
விதியினை வென்றிட வேகமாய் வருவாய்.   25

வருவதை அறியாது வாடிடும் போது
கருவியாய் வந்தே அதனைக்களைவாய்
குருவாய் விளங்கும் குகனின் தாயே
திருவாய் மலர்ந்தே திறனை அளிப்பாய்.   26

அளித்திடு எந்தனுக்கு ஆன்ம சக்தியை
களித்திடச்செய்திடும் நீயே நிலமாய்
வெளியாய் காற்றாய் நீராய் நெருப்பாய்
ஒளிர்வாய் ஒளியினைத் தந்திடுவாயே.   27

தந்தேன் அபயம் என்றே உரைத்து
வந்தே அருகினில் அமர்ந்து விடம்மா
கந்தன் கணபதி அன்புத்தாயே
உந்தன் புகழை இயம்புதல் இயலுமோ.   28

இயலாச்செயலையும் இயக்கிடச்செய்து உன்
தயவால் தருமமே தழைத்திடச்செய்தாய்
அயலார் வந்தெமை எதிர்த்திடும்போதே
புயலாய் அவர் தமை விரட்டியே விடுவாய்.   29

விடு விடு விடுவென விரட்டிடுவோரையும்
சிடு சிடு சிடுவேனச்சீரிடுவோரையும்
கடு கடு கடுவென கர்ஜிப்போரையும்
நடு நடு நடுங்காமல் காத்திடு காளியே.   30

காளியின் ரூபமாய் ஆதிபராசக்திநீ
யாளியின் மீதே அமர்ந்தே வருவாய்
கோளிலி எம்பெருமான் தேவியே
தாளினைப்பற்றினேன் தயாபரியே.   31

பரிதனை நரியாக்கி நரிதனை பரியாக்கிய
விரிசடையோனின் வியன்மிகு நாயகி
திரிபுர சுந்தரி திவ்யஸ்வரூபிணி
கரிமுகத்தோனின் அன்னை பராசக்தி.   32

சக்தியின் மலரடி சத்தியமாய்ப்பணிய
பக்தியும் பெருகிடும் பாவமும் விலகிடும்
முக்தியே கிடைத்திடும் மும்மலம் அகன்றிடும்
யுக்தியே வேண்டாம் சத்தியம் நம்பினேன்.   33

நம்புவோர் அனைவரும் நற்கதி பெறுவர்
தும்புரு நாரதர் தேவரும் பணிந்ததால்
கொம்புடை மகிஷனைக் கொன்றே அழித்தனை
சம்புவின் சிவை மகிஷாசுர மர்த்தினி.   34

மர்த்தினி மாதங்கி மாலினி சூலினி
வர்த்தினி வாராஹி வித்யாஸ்வரூபிணி
நர்த்தினி நந்தினி நாராயணி என
அர்ச்சிக்க நாமங்கள் பலப்பல கொண்டாய்.   35

கொண்ட நாயகனின் உயிரைக்காக்கவே
கண்டந்தனிலே விடந்தனை நிறுத்தினாய்
கொண்டல் போன்ற கண்கள் பெற்றவளே
தொண்டை மண்டலமுறை காமட்சித்தாயே.   36

காமனை எரித்திட்ட ஈசனின் சிவையே
வாமனன் சோதரி வஜ்ரேச்வரி நீ
சோமானவன் சொல் கேளாமலேதான்
கோமகன் தக்கன் யாகம் சென்றனை.   37

சென்றவள் தனையே தகப்பனும் வருவாய்
என்றழையாமலே கர்வம் கொண்டவன்
நின்றதைக் கண்டனள் தாட்சாயணியும்
குன்றிய மனதுடன் குதித்தனள் (யாக) குண்டத்தில்.    38

குண்டத்தினின்று தோன்றிய தேவிதான்
கொண்ட ஈசனை அடைய எண்ணிப்பூ
மண்டலந்தன்னில் தவமியற்றிட நீல
கண்டனும் மகிழ்ந்தே மணந்தார் மங்கையை.   39

மங்கை தாடகை (மலர்) சாத்திடும் வேளையில்
கங்கையணி ஈசன் தன சிரம்தனை சாயத்தனன் 
குங்கிலியக்கலையர் அச்சிரம்தனை நிமிர்த்திய
எங்கள் செஞ்சடையோன் பெரிய நாயகியே.   40

நாயகன் நாரணன் சோதரியே யான்
நேயமுடன் பல நன்மைகள் புரிந்திட்டு
தூய மனதுடன் நின்பதம் பணிந்திட
தீய வினைகள் அகற்றி அருளே.   41

அருள் பெற்ற அடியவர் அனையோருக்கும்
பொருளினை ஈந்திடும் புவனேஸ்வரியே
இருளினை அகற்றிடும் இச்சா சக்தியே
மருள்வதை மாய்த்திடும் மாயா ரூபியே.   42

ரூபமும் அரூபமும் ஆனவள் நீயே
கோப தாபங்களைத் தீர்த்திடுவாயே
சாப விமோசனம் பெற்றிடச்செய்தே
தாபம் விலக்கிடு பைரவித்தாயே.   43

பைரவி ராகத்தை விரும்பியே கேட்பாய்
வைரம் வைடூரியம் முத்தும் அணிவாய்
வைரவி என்னும் பெயரும் கொண்டாய்
பைரவரும் உன் சந்நிதி காக்கவே.   44

காக்கும் கரங்களால் கைகளைக்காத்திடு
நோக்கும் விழியினால் கண்களைக்காத்திடு
நீக்கமற நிற்கும் நீலாயதாட்சியே
ஏக்கம் மிகக்கொண்டேன் எதிரில் வந்திடு.   45

வந்த நொடியிலே வறுமை அகற்றிடு
கந்தனின் தாயே கவலைகள் போக்கிடு
சொந்த பந்தமென்ற தளையை அகற்றிடு
எந்த நிலையிலும் (என்) அருகில் நின்றிடு.   46

நின்ற கோலத்தில் நிம்மதி அளிப்பாய்
கன்று குணிலாய் எறிந்தவன் சோதரி
நன்று தீதென்று இல்லாதவளே நான்
என்றும் உந்தன் தாள் பணிந்திடுவேன்.   47

வேத மெய்ப்பொருள் ஐந்தெழுத்தினை நீ
நாதனிடம் கற்க நினைத்தே ஈசனை
ஓதவே செய்தாய் காளத்தியிலே நின்
பாதமே (கதி) ஞானப்ப்ரசுன்னாம்பிகையே.   48

அம்பிகை நீ அருள் பெற்ற தலந்தனில்
வெம்புலி பன்றி இவற்றினைக்கொன்றே
வெம்பசி ஆற்றிடும் வேடன் திண்ணனும்
நம்மையே ஆண்டிடும் ஈசனைக்கண்டனன்.   49

கண்டதும் களிப்புடன் பன்றியைச்சமைத்து
துண்டங்களாக்கி சுவையும் பார்த்து
கண்டத்தில் நீரை நிரப்பிக்கொண்டு
அண்டினன் ஈசனின் இருப்பிடம் தனையே.   50

இடபவாகனம் மேவிய ஈசர்க்கு
திடமுடன் அவ்வூனினைப் படைத்தனன்
கடவுளும் அதனை அன்புடன் ஏற்றனர்
கடமை மறந்தனன் வீடும் துறந்தனன்.   51

துறந்த முனிபோல் ஒவ்வோர் தினமும்
பறந்து பறந்தே ஈசனை வணங்கினான்
சிறந்த பக்தனைசோதிக்க நீல
நிறமிடற்றோனும் மனதினில் கருதினார்.   52

கருதிய செயலை முடித்திடக்கண்ணில்
குருதியை வடித்தார் காளத்தியப்பரும்
அருகிலே வந்து திண்ணனும் கண்டான்
பெருகும் குருதியை நிறுத்திடப் பார்த்தான்.   53

பார்க்கும் வேளையில் குருதி நில்லாமையால்
யார்க்கும் தோன்றா மதியினால் தான்
பார்க்க இருக்கும் (தன) கண்கள் தனையே
வார்க்க அம்பினால் குத்தியே எடுத்தான்.   54

எடுத்த கண்ணினை ஈசர்க்கு அப்பினான்
கொடுத்த கண்ணினால் குருதியும் நின்றது
அடுத்த கண்ணினில் குருதியைக்கண்ட தன
அடுத்த கண்ணையும் எடுக்க முயன்றான்.   55

முயன்ற வேளையில் ஈசரும் அவனை
இயன்றதற்கு மேல் செய்தனை நீயென
வியந்தே நில்லு கண்ணப்ப என்றே
இயம்பிடத் திண்ணனும் கண்ணினைப்பெற்றான்.   56

கண்ணினைப் பெற்ற திண்ணன் வேடனும்
கண்ணப்பர் ஆயினர் இத்தலந்தனிலே
விண்ணோர் கூறும் பஞ்சபூதங்களுள்
ஒண்ணாய் விளங்கிடும் வாயு இத்தலமே.   57

இத்தலந்தனிலே முக்திபெற விழைந்த்திட்ட
அததியும் சிலந்தியும் காலமாம் பாம்பும்
எத்தினமும் ஈசனைக் காக்க எண்ணி
நித்தியப் பூசையால் முக்தியும் பெற்றன.   58

முக்தி தந்திடும் பலப்பல தலங்களுள்
சக்தி பீடத்தில் ஒன்றாய் விளங்கிடும்
பக்தி மனதுடன் பலரும் வந்தே
சக்தியை வழிபடும் தலம் மாங்காடே.   59

மாமரங்களடர்ந்த மாங்காட்டினிலே
காமனை அழித்த ஈசனின் நாயகி
வாமனன் நாரணன் நலம் மிகு சோதரி
சோமனை அடையவே தவமியற்றினளே.   60

இயற்றிய தவத்தினை இயம்புதல் இயலுமோ
முயற்சியால் பஞ்சாக்னியை வளர்த்தே
புயலாய் வீசிடும் அக்னியில் காம
நயனங்கள் கொண்டவள் நின்றால் விரலினால்.   61

விரலினால் நின்றே இயற்றிய தவத்தினை
அரவணி பிரானும் பார்த்தே மகிழ்ந்து
விரைவில் செல்வாய் காஞ்சி மாநகர்க்கென
அரனும் பணித்திடச் சென்றனள் கஞ்சிக்கே.   62

கஞ்சி மாநகர் கவின்மிகு மூதூர்
கொஞ்சும் அழகுடன் ஒளிர்ந்திடும் ஓரூர்
பஞ்ச பூதங்களுள் பூமித்தலமாம்
நெஞ்சையள்ளும் பழம்பெரு நகரே.   63

நகரேஷு காஞ்சியென காளிதாசன் புகழ்ந்த
நகரினில் வந்தே மாமரத்தடியினில்
நிகரிலாத் தவந்தனை பின்னும் தொடர்ந்ததை
பகரவே விழைந்து நினைத்தேன் மனதினில்.   64

மனதினில் திடமுடன் ஈசனை மணக்கவே
சினமது இன்றியே சிவபக்தியினால்
கனமிலா மணலால் லிங்கமே அமைத்து
தினமும் பூஜையை அன்புடன் செய்தனள்.   65

செய்த பூஜையில் மகிழ்ந்த ஈசனும்
பொய்கை நீரையே வெள்ளமாக்கினார்
செய்வதறியாது தவித்திடும் வேளையில்
உய்விக்க வந்தார் ஏகாம்பரனார்.   66

ஏகாம்பரனார் எழிலுடன் வந்தே
ஏகாந்தமாய் நின்ற காமாட்சி தேவியை
பாகாய்க் கரையும் பரிவுடன் அன்பாய்
லோகாம்பிகையை மணமே புரிந்தார்.   67

புவிதனில் ஷண்மதம் அமைத்த சங்கரர்
கவிகள் பலருடன் வாதம் புரிந்தவர்
கவின்மிகு சங்கரமடம்தனை அமைத்ததை
நவிலுதல் இங்கே அவசியம் அன்றோ.   68

அம்புலி அணிந்தவன் அப்புவாய் அமர்ந்த
ஜம்புகேஸ்வரரின் அகிலாண்டேஸ்வரி நின்
வெம்மை தீரவே ஆதி சங்கரரும்
அம்மை எதிரிலே கணபதி அமைத்தார்.   69

கணபதி மீது நீ கொண்ட அன்பினால்
குணமதில் குளிர்ச்சியைப் பெற்றவளாகியே
கணமதில் கருணையைப் பொழிந்திடும் தாயே
ருணமதைத் தீர்த்தே வைத்திடுவாயே.   70

வானமும் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
வானாய் நின்றான் சிதம்பரம் தனிலே
மானும் மழுவும் ஏந்திய ஈசன்
கானமுடன் தாளத்திற்கு நடனமாடியே.   71

நடம் புரிந்திடும் நடராசன் திருக்கோயில்
புடம்போட்ட பொன் வேய்ந்த கூரைக்கீழ்
படம் எடுத்திடும் பாம்பை அணிந்தவன்
விடம் உண்டவன் ஆனந்தமாய் ஆடினார்.   72

ஆடிய பாதனின் அன்புடை சிவகாமி
நாடியவர்க்கு நன்மையே புரிந்து நீ
வாடிய பயிரினைக்காத்த்டும் தாய் போல்
கூடிடும்  பக்தரின் குறைதனைத் தீர்ப்பாய்.   73

தீயாம் பஞ்ச பூதங்களுள் ஒன்றாம்
தீயாய் நின்றான் அண்ணாமலையில்
சேயாய் எண்ணியே மக்களைக்காத்திடும்
தாயாம் உண்ணாமலையம்மையுடன்.   74

அம்மை அப்பனின் புகழ்தனைப் பாடியே
வெம்மை தணித்திடும் பௌர்ணமி நிலவிலே
உம்மைச்சுற்றியே கிரிவலம் வந்திடும்
எம்மையே நீர் ஏற்றருள்வீரே.   75

அருவியாய்க் கருணை மழை பொழிந்திடும்
திருவுடைத் திருவண்ணாமலை தனிலே
மருவும் மலையில் உலவும் முனிவர்கள்
குருவாய் அமர்ந்தனர் பலரும் என்றுமே.   76

என்றும் அழியாக் குருவருள் பெறவே
சென்றிடும் மலையாம் சோதியின் மலையில்
கன்றினைக்கண்ட தாயின் அன்பு போல்
சென்றவர்க்கருளும் ரமணாஸ்ரமமே.   77

ஆஸ்ரமம் என்பது ஒன்றிலை இங்கே
ஈஸ்வரனின் அங்கமாய் அமைந்த
ஈஸ்வரியின் புதல்வாராய்ப் பிறந்தோர்
ஆஸ்ரம வாழ்க்கை வாழ்கின்றனரே.   78

வாழ்வினில் பலவிதம் கண்ட அருணகிரி
பாழ்மனம் சஞ்சலம் அடைந்தபின் கீழே
வீழ்ந்திட இருந்தோனைக் காத்த முருகன்
ஆழ்ந்த ஞானத்தை அளித்தனன் அவர்க்கே.   79

அளித்த ஞானத்தால் அருமையாய்ப் பாடினார்
தெளிந்த பக்தியால் பரவசமடைந்து
களித்து மகிழவே திருப்புகழ் தனையே
கிளியாய் அமர்ந்தார் கோபுர வாயிலில்.   80

வாவென அழைத்திடும் போதே வந்து
காவெனக் கூப்பிடும் போதே காத்து
மாவேனக்கதரிடும் கன்றினையோத்த
சேய் எனக்கருவாய் திரிபுர சுந்தரி.   81

திருவாரூர் வாழ் கமலாம்பிகையே
திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகையே
திருவையாற்றில் தர்மசம்வர்த்தினி
திருமீயச்சூரமை லலிதாம்பிகையே.   82

அம்பிகை கௌரியும் கடுந்தவம் இயற்றிய
செம்மலை கொண்ட திருச்செங்கோட்டில்
நம்பிரான் நங்கையைப் பாகமாய்க் கொண்டே
உம்பரும் போற்றவே சைவச்க்தியானார்.  83

சக்தியும் சிவனும் ஒன்றாய் இணைந்ததால்
சக்தியைப் பாடுங்கால் சிவனையும் பாடவே
சக்தியே தந்தது ஞானசக்தி அச்
சக்தியே நித்தமும் மக்களைக் காக்கும்.   84

காக்கும் கடவுளர் அம்மையப்பனின்
நோக்கும் விழியினால் நோய்கள் அகன்றிடும்
தாக்கும் தாக்குதல் தன்மை நீங்கிடும்
வாக்கில் வளத்துடன் வன்மை அளித்திடும்.   85

அருணன் இந்திரன் அம்புலி குபேரன்
வருணன் அனைவரும் வணங்கிடும் அன்னை
தருணம் வரும் வரை தயங்கி நிற்காமல்
கருணை உள்ளத்தால் காத்திடுவாயே.   86

காத்திடும் கடவுளர் ஒன்றேயாயினும்
நேத்திரத்தாற்கண்டு பரவசமடைந்து
தோத்திரம் செய்து புண்ணியம் பெறவே
க்ஷேத்திரம் பலவும் தொன்றியதன்றோ.   87

தோற்றம் அளித்திடும் ஈசனின் தலங்களில்
நாற்றம் மிகவுடை மலர்களால் அர்ச்சித்தே
மாற்றம் மனதினில் மிகுதியாய்ப் பெற்றே
ஏற்றம் பெறுவது மிகையிலை திண்ணமே.   88

 திண்ணமாய் இதனை நம்புவோர்க்கு முக்
கண்ணுடை ஈசனும் காமாட்சி அன்னையும்
எண்ணிலா நலன்களை இன்பமாய் நல்கியே
மண்ணினில் வாழவே செய்வர் வரத்தால்.   89

வரமதால் புவிதனில் இறைவனின் புதல்வராய்
பரமதில் பரவிய அறுபத்து மூவரும்
சிரமதில் கங்கையைக் கொண்ட ஒருவனே
பரமென எண்ணியே அப்பனைப் பாடினர்.   90

அப்பரும் பாடினார் அரனைப் போற்றியே
செப்பரும் தமிழிலே இசைநயத்துடன்
முப்புரம் எரித்த சிவனைப் பாடிட
அப்புரமமைந்த அம்மையும் அருளினள்.   91

அன்று தடுத்தாட் கொளப்பட்ட சுந்தரர்
நின்று பாடினார் திருவொற்றியூர் தனில்
கொன்றை அணிந்த பிரானின் சந்நிதியில்
நன்று மணம் புரிந்தார் சங்கிலி தனையே.   92

சங்காபிஷேகம் தனை விரும்பிடும் நாயகன்
கங்கையணிந்தவன் புகழைப் பாடினார்
மங்காப் புகழெய்திய மணிவாசகரும்
செங்கலும் உருகிடும் திருவாசகந்தனை.   93

தனக்கமுதூட்டியதாரேன் தந்தை வினவ
எனக்கமுதூட்டியது தோடுடைய செவியன் என
மனக்களிப்புடன் பாடிய சம்பந்தர்
தினம் தினம் ஈசனைப் பாடியே மகிழ்ந்தார்.   94

பாடுவர் ஆடுவர் பரமனை அடையவே
நாடுவர் அவனது இணையடி நீழலே
தேடுவர் அவனிடம் ஞானத்தைப் பெறவே
கூடுவர்  கோயிலில் தம் வினை தீரவே.   95

தீராப் பசியினைத்தீர்த்திடும் எண்ணத்தில்
தாராளமாய் அளித்திடும் அன்னத்தை
ஏராளமாய் கோயிலில் வழங்கியே
பேரானந்தம் அடைந்திடுவார்களே.   96

வாழ்வினில் வளம்பெற எண்ணுவோர் கோயிலில்
தாழ்மையுடன் பல தொண்டுகள் செய்து
ஊழ்வினை தீர்ந்து உய்வும் பெற்று
ஏழ்மையும் நீங்கி எழிலுடன் விளங்குவர்.   97

விளக்கினை எரித்திட எண்ணையும் நல்கி
விளக்கமாய் ஆன்மிக நல்லுரையாற்றி
குளத்தினை எப்போதும் தூய்மையாய் வைத்தே
வளத்துடன் நீடூழி வாழ்வார் வையத்துள்.   98

வைகறை நீராடி நல்லாடை உடுத்தி
மெய்யில் முழுவதும் திருநீறு பூசி
கையில் கற்பூரம் பூ பழம் கொண்டு
ஐயன் இணையடி தொழுதிடச்செல்வோம்.   99

செல்வம் நற்குணம் திருவருள் பெற்று
கல்வி கேள்விகளில் திறமையும் பெற்று
நல்லோர் பலரின் ஆசியும் பெற்றே
பல்லாண்டு பல்லாண்டு புவிதனில் வாழ்க !!!   100