Sunday, June 18, 2017

PARAMACHARIYA KRITHA KAMAKSHI STOTHRAM - TAMIL & English

காமாக்ஷி ஸ்தோத்ரம் 


பாராயணம் பயன் :


          கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டும் என்று ஜகத்குரு காஞ்சி மகா பெரியவா இயற்றி அனுகிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்ரம் இது.

          ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.


ஸ்தோத்ரம் :-

மங்கள சரணே! மங்கள வதனே! மங்கள தாயினி காமாக்ஷி |
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ||

கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட வினாஷினி காமாக்ஷி |
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சமஜன ஸதயே காமாக்ஷி  ||   (குரு குஹ....)

க்ருஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நதஜன சுகதே காமாக்ஷி |
சிவ முக விநுதே பவ சுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி  ||   (குரு குஹ....)

பக்த சுமானஸ தாப நிவாரிணி மங்கள தாயினி காமாக்ஷி |
கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி  ||   (குரு குஹ....)

பர சிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி |
ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி  ||   (குரு குஹ....)


Mangala charane mangala vadane Mangala dhaayini kaamaakshi |
Guru guha janani kuru kalyaanam Kunjarai janani kaamaakshi ||

Kashta nivaarini ishta vidhayini Dushta vinaasini kaamaakshi
Himagiri thanaye mamahrudi nilaye Samajana sadaye kaamaakshi (guruguha..)

Gruhanutha charane gruhasutha daayini Nathajana sukhade kaamaakshi
Sivamukha vinuthe bhava sukhadaayini Navanava bhavathe kaamaakshi (guruguha..)

Bhaktha sumaanasa thaapa nivaarini Mangala daayini kaamaakshi
Kenopa nishath vaakya vinodini Devi paraasakthi kaamaakshi (guruguha..)

Parasiva jaaye varamuni bhaavye Akhilaandeswari kaamaakshi
Haridraa mandala vaasini nithye Mangala daayini kaamaakshi (guruguha..)

**********************************************************************************************************************************

மூகபஞ்ச சதியில் உள்ள... காமாட்சி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது.

ச்ரியம் வித்யாம்தத்யாஜ்னனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

கருத்து: காமாட்சி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே....! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எதைத்தான் கொடுக்காது?

பவுர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், வித்யை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.

*********************************************************************

No comments:

Post a Comment