ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
Learn to read Mahalakshmi Ashtakam:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
|
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம்:
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||
சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||
சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||
ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||
பலஸ்ருதி:
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||
|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்:நமஸ்தே செல்வ ரூபிண்யை!
நமஸ்தே கமலவாசினி!
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா!
(தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.
தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.)
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்:
நமஸ்தே செல்வ ரூபிண்யை!
நமஸ்தே கமலவாசினி!
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா!
(தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.
தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.)
ஸ்தோத்திர விளக்கம்:
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1
வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில்
செலுத்தும் மஹா மாயையே!
ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!
தேவர்களால் வழிபடப்படுபவளே!
சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும்
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!
நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2
எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!
கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே!
எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!
மஹாலக்ஷ்மித்தாயே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!
சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3
உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!
அனைத்து வரங்களையும் அளிப்பவளே!
எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!
எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4
அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை
அருள்பவளே!
மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மையே!
ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி |
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5
முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான
ஆதிபராசக்தியே!
யோக நிலையில் தோன்றியவளே!
யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் மாதாவே!
ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6
பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!
எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற
கோபம் கொள்பவளே!
அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!
பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7
பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே!
பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!
ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8
தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!
பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!
பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே!
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!
பலஸ்ருதி:
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||
மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா
இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.
ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||
தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும்.
தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும்
குறைவின்றி நிறைவாக விளங்கும்.
திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||
தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை
எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர்
நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
***********************
Learn - Mahalakshmi Ashtakam stotram lyrics in Tamil, English and Hindi
Mahalakshmi Astakam stotram lyrics in tamil with explanation
=========================================================
Really nice.. thanks a lot for very clear Sri Mahalakshmi Swami Ashtakam.
ReplyDeleteVery nice...good awakening after reading Tamil translation. From where I can locate Devi Mahatmiyam with Sanskrit and Tamil version...
ReplyDeleteThanks somuch for your effort
ReplyDeleteSuper
ReplyDeleteLike this can you please bring out all the Ashtagams.?Since I found this to be very useful and simple and noteworthy, I place this humble request.
ReplyDeleteThanks a lot for your kind effort.
ReplyDeleteநன்று
ReplyDelete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
ReplyDeleteThank you so much for your clear translation and meanings.
ReplyDeleteThanku very nice mahalakshmi potri om
ReplyDeleteIt gives a blessed feel after complets my reading. May God Lakshmi give wealthy backgrounds to all.
ReplyDeleteVery nice clear...Jai mahalakshmi
ReplyDeleteAll a long I was reciting without knowing the complete meaning. Thanks
ReplyDeleteExcellent explanation..
ReplyDeleteWonderful ஶ்ரீ மஹால்ஷ்மி தாயே போற்றி
ReplyDeleteThe stotras (forms) of Shri Ashtalakshmi ji that we have told you are considered to be sources of wealth. There are temples of Goddess Lakshmi in every corner of the country and abroad, in which the temple named Ashtalakshmi Kovil is very popular, which is established in Chennai.
ReplyDelete