Thursday, July 13, 2017

Vel Maaral Maha manthiram in Tamil - வேல் மாறல் மஹா மந்திரம்

வேல் மாறல் மஹா  மந்திரம்


வேலே வேலனாவான்!!!

    பஞ்சாட்சரம் (திருவைந்தெழுத்து), சடாட்சரம் (திரு ஆறெழுத்து) போன்ற மந்திர எழுத்துக்களை ஐங்கோண, அறுகோணச் சக்கரங்கள் கட்டங்களுக்குள் அமைய அடைத்து, அந்த யந்திரங்களைப் பூஜை செய்வதால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். அந்த முறையில் இந்த ‘வேல்மாறல்’ அமைப்பையும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் உருவாக்கியுள்ளார்.

    வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

    வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

    ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும். அதிலும், கார்த்திகேயக் கடவுளாம் முருகனுக்கு உகந்த திருக்கார்த்திகை புண்ணிய மாதத்தில், வேல் மாறல் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷம்!

----------------------------------------------------------------------------------------------------------------------------

பாராயணம் முறை:

வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை.

அவை:

1. சீர்பாத வகுப்பு  – மணி வகுப்பு,

2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு,

3. வேல் வகுப்பு -  ஔஷத (மருந்து) வகுப்பு.

வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக  (16×4 = 64)  அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.

6-வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என(து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.

இந்த 16-வது  அடி எழுவாய் (Subject) ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக (verb) வருமாறு 16-ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.

வேல் மாறல் மஹா  மந்திரம்


வி
நாயகர் வணக்கம் (கந்தர் அனுபூதி)
நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ் சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக் கரஆனைபதம் பணிவாம்
முருகன் பெருமை (அலங்கரம்)
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
மயிலின் திரம் (கந்தர் அலங்கரம்)
தடக்கொற்ற வேள்மயி லேஇடர் தீரத் தனிவிடில்நீ
வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் தோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
தேவேந்திர சங்க வகுப்பு (மந்திரம் போன்றது)
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு
    சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி.  1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
    தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை.  2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித
    தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை.  3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
    தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி.  4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள
    நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்.  5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
    யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்.  6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல
        ஏகாமபரை யிந்திரை மோகாங்கசு மங்கலை.  7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள்
    ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி.  8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை
    காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்.  9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத
    காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்.  10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை
    காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு.  11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர்
    காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன்.  12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
    வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன்.  13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள்
    தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்.  14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக
    லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்.  15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
    ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.  16
வேல் மாறல் மஹா மந்திரம்:

(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
(இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும்)
  1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
  2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              ( ... திரு ... )
  3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்              ( ... திரு ... )
  4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
  5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்              ( ... திரு ... )
  6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும்              ( ... திரு ... )
  7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
  8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
  9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும்              ( ... திரு ... )
10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்              ( ... திரு ... )
11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்              ( ... திரு ... )
13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
       ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்              ( ... திரு ... )
14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்              ( ... திரு ... )
15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும்              ( ... திரு ... )
17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும்              ( ... திரு ... )
19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்              ( ... திரு ... )
20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்              ( ... திரு ... )
21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்              ( ... திரு ... )
23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும்              ( ... திரு ... )
24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
        முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்              ( ... திரு ... )
25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்              ( ... திரு ... )
28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும்              ( ... திரு ... )
29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்              ( ... திரு ... )
30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              ( ... திரு ... )
33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்              ( ... திரு ... )
35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
         கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              ( ... திரு ... )
36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும்              ( ... திரு ... )
40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்              ( ... திரு ... )
41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்              ( ... திரு ... )
42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்              ( ... திரு ... )
44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும்              ( ... திரு ... )
45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும்              ( ... திரு ... )
46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்              ( ... திரு ... )
48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்              ( ... திரு ... )
49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும்              ( ... திரு ... )
50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும்              ( ... திரு ... )
51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
         பெருத்தகுடர் சிவத்ததொடை
         எனச்சிகையில் விருப்பமொடு சூடும்              ( ... திரு ... )
52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
         இடுக்கண்வினை சாடும்              ( ... திரு ... )
53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
         முளைத்த(து)என முகட்டின்இடை
         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்              ( ... திரு ... )
54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
         கவிப்புலவன் இசைக்(கு)உருகி
         வரைக்குகையை இடித்துவழி காணும்              ( ... திரு ... )
55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும்              ( ... திரு ... )
56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
         ஒளிப்பிரபை வீசும்              ( ... திரு ... )
57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
         கடித்துவிழி விழித்(து)அலற மோதும்              ( ... திரு ... )
58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்              ( ... திரு ... )
59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
         விதிர்க்கவளை(வு) ஆகும்              ( ... திரு ... )
60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
         எனக்(கு)ஓர் துணை ஆகும்              ( ... திரு ... )
61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
        விருத்தன்என(து) உளத்தில்உறை
        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே              ( ... திரு ... )
62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
         கழற்குநிகர் ஆகும்              ( ... திரு ... )
64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
         அடுத்தபகை அறுத்(து)எறிய
         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும்              ( ... திரு ... )
( ...திரு… முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும்... )
(வேலும் மயிலும் சேவலும் துணை - 6 முறை ஓதவும்)
தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

(வேலும் மயிலும் சேவலும் துணை)

வேல் விருத்தம் – 3 : வேதாள பூதமொடு



வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும்
வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும்
அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை
அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி
தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப்
புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன்
புங்கவன் செங்கை வேலே.

உடம்பிடித் தெய்வாஷ்டகம்

உலவும் பானு சதகோடி
     உருவாய்த் திகழும் ஒளிவடிவேல்;
சுலவும் ஞானத் திரள் எல்லாம் 
     தொகுத்து வடித்த திருநெடுவேல்;
நிலவும் வீரம் அறத்தோடு
     நீதி வடிவாய்த் துலங்கும் வேல்;
நிலைநின் றலைக்கும் அவிச்சையிருள்
     நில்லா தோடும் சுடர்வைவேல்;

 சூர்மா முதலைத் தடிந்த வேல்
     துட்டக் கவுஞ்சம் துளைத்த வேல்;
கார்மாக் கடல்நீர் நெருப்பாகக்
     கனன்று கொதிக்கச் சினந்தவேல்;
போர்மா வலத்தின் அசுரகுலம்
     பொடியாய்ப் பறந்து கடல்தூர்க்கத்
தேர்மாக் கலபத் தேறிவரும்
     செந்திற் கந்தன் திருக்கைவேல்.

 குமுறிக் குமுறி அழுது மனம்
     குலைந்து சிறையில் வருந்திநின்ற
அமரர் குலத்தை ஈடேற்றி
     அமரா வதியிற் குடியேற்றும்
விமலன் வனசக் கரத்தமர்வேல்;
     வென்றி வடிவேல்; சண்முகவேல்;
கமலன் படையைச் சிவன் படையைக்
     கடுகிப் பிடிந்து விழுங்கும்வேல்.

 அடியார் மீது வருங் கூற்றை
     அலறக் குத்தித் துரத்தும் வேல்;
முடியாப் பிறவிப் பெருங்கடலை
     முழுதம் வற்றப் பருகும் வேல்;
விடியா மாயைப் பெருங்கங்குல்
     விடியும் வண்ணம் மின்னும் வேல்;
ஓடியாத் தவத்துத் தொண்டன் கால்
     ஒடிந்த எலும்பை ஒட்டும் வேல்;

 கந்த முனிவன் நாவிருந்து
     கவிதை மாரி கொட்டும் வேல்;
சந்த வண்ணச் சரபத்தின்
     தலைமேற் பாறை விழாதபடி
முந்திச் சென்று காக்கும் வேல்;
     மூகன் நாவை அசைத்தினிய
கந்தர் கலிவெண் பாவருளிக்
     கனிவிற் கேட்டு மகிழும்வேல்.

 காட்டிற் சிக்கித் தடுமாறும்
     கருணை அருண கிரிக்குவழி
காட்டிச் செல்லும் வழித்துணை வேல்;
     கனிந்து பழுத்த பத்திமையால் 
பாட்டிற் சிறந்த நடேசகவி 
     ராசன் பாடும் நூலெல்லாம்
ஏட்டு வடிவம் பெறத் தக்கோர்
     இதயத் திருந்து தூண்டும் வேல்.

 நம்பிக் குகனை அலங்கரித்து
     நாளுங் கண்டு மனங்குளிரும்
தம்பிச் சாமி கண்ணைவிட்டுச்
     சற்றும் அகலா தொளிரும்வேல்;
எம்பி ரான்சுந் தரசாமி
     இயற்றும் பூசைக் குண்மகிழ்ந்து
செம்பொன் மாரி பொழிவித்துத்
     தெய்வத் தொண்டிற் குதவும் வேல்.

 வேலே ஞானம்; குமரன் கை
     வேலே தியானம்; குகன்கரத்து
வேலே சக்தி; செவ்வேள்கை
     வேலே புக்தி; இளமுருகன்
வேலே முத்தி; சரவணன்கை
     வேலே சகல சௌபாக்யம்;
வேலே தெய்வம்; பிறதெய்வம்
     வேறொன் றில்லை இல்லையே.

தணிகை நாயகன் மாலை - (வேலின் சிறப்பு)

வேலதே சிவமஞ் செழுத்தெனச் சொற்றார்
      விரிபுகழ்ப் பாவல ரதனால்
வேலதே நினைக்க, வேலதே ஓத,
      வேலதே யான்தொழ என்றன்
பாலதே சிவனார் அஞ்செழுத் தோதும்
      பயனெலாம் எனஉணர்ந் தேன்யான்
தோலதே உடையாக் கொண்டவர்க் கோர்சொல்
      சொல்லிய தணிகை நாயகனே!

வேல் வணக்கம் - திருப்புகழ்

திருப்பரங்குன்றம்

சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி
ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில்
மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம்
கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்
குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு
பெருமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்
ஆறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை.

திருஆவினங்குடி

மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ
மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான
ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும்
நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.

பழனி

திண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த
அண்ணணார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய
வண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த
விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.

திரு ஏரகம் (சுவாமிமலை)

சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்
சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்
பொன்னிசூழ் ஏரகத்துப் பொறுப்பினிற் கோயில் கொண்ட
பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.

குன்றுதோறாடல் (திருத்தணி)

கொன்றைசேர் சடைகள் ஆடக்கொடியிடை உமையாள் காண,
மன்றிலே ஆடல் கொண்ட மகதேவன் வியந்து வாழ்த்தக்,
குன்றுதோறாடல் காட்டும், குமரவேள் மலர்க் கரத்து
வென்றிசேர் சக்தி வேலை வேண்டுவ(து) எமக்கு வேலை.

பழமுதிர்சோலை

புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதர்கண் நோக்கில்
அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய், அன்பர்
பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர்சோலை மேவும்
சிவசுப்ர மண்யன் வேலை சேவிப்ப(து) எமக்கு வேலை.

கதிர்காமம்

மடமையில் மனந்து வாழ்வாய் வானவர் வணங்கும் தேவாய்க்
குடிமுழு தடிமை கொண்டோன் குறைகளைந்(து) ஆளுங் கோவாய்க்
கடலுல கனைத்தும் போற்றக் கதிர்காம வெற்பின் மேவும்
அடிகளின் கரத்து வேலை அர்ச்சிப்ப தெபக்கு வேலை.

திருப்போரூர்

ஓரூரும் பேரும் இல்லான் உறவோடு பகையும் இல்லான்
ஆரூரன் தூதன் ஆனான், அவன்மகன் முருகன் என்பான்
போரூரிற் கோவில் கொண்டான் புகல் அடைந்தாரைக் காப்பான்
சீரூரும் இவன்கை வேலையே சிந்திப்ப(து) எமக்கு வேலை.

திருத்தனிகை

பண்டாரப் பையன் என்பார், பரிந்(து) அவன் மணந்து கொண்ட
பொண்டாட்டி இருவர் என்பார், பேசும் மெய்த் தெய்வம் என்பார்
கொண்டாடத்தணிகை வெற்பிற் கோவில் கொண்டுள்ளான் என்பார்
தண்டாமல் அவன்கை வேலைத் தரிசிப்ப(து) எமக்கு வேலை.

சென்னிமலை

விருப்பமும் வெறுப்பும் இல்லா விழுமிய முனிவர் தேவர்
திருப்பதம் வணங்கி வாழ்த்தச், செருக்களத்(து) அசுரன் நெஞ்சப்
பொருப்பினைப் பிளந்து, வஞ்சப் பொறுப்பினைத் துளைத்த சென்னிப்
பொருப்பின் கரத்து வேலைப் போற்றுவ(து) எமக்கு வேலை.

குமரகோட்டம்

அப்பனே முருகா நீயே அரன் எனச் சரண் அடைந்தார்
தப்பெலாம் குறியா(து) ஈன்றதாயெனப் பரிவு காட்டும்
பொய்பிலான், குமரகோட்டப் புனிதன் என்(று) உலகம் போற்றும்
ஒப்பிலான் கரத்து வேலை ஓதுவ(து) எமக்கு வேலை.

சிறுவாபுரி (சேக்கிழார் தாசன் இயற்றியது)


வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்
தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த 
சிறுவை தன் வாழ்வாம் எங்கள் ஸ்ரீராமன் மருகனாகும் 
அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.


ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து 
செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த 
ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர் 
செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.

(வேலும் மயிலும் சேவலும் துணை)

கந்தபுராணம் - வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;

மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

 (வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!)

வேல் அலங்காரம்

வாலா யுதத்கரத்து இந்திரன் ஆதியர் வாழ வைத்து
மாலா யுதத்தின் அவமானம் தீர்த்து மடிவில் சிவன்
சூலா யுதத்தின் துணையாய்க் குகன்கையில் தோற்றும் வெற்றி
வேலா யுதத்துக்கு மேலாயுதம் மென்ன வேறில்லையே.

திருத்தணிகைச் சந்நிதிமுறை

எந்நாளும் உன்கழல் நாடவும்
     எந்நாளும் உன்புகழ் பாடவும்.
எந்நாளும் உன்எழில் நோக்கவும்
     எந்நாளும் உன்கதை கேட்கவும்
எந்நாளும் உன்பணி செய்யவும்
     எளியேன் தனக்கு அருள்செய்குவாய்!
மின்னாள் உமைதரு மைந்தனே!
     வேலாயுதா! வேலாயுதா!

 ஶ்ரீ சுப்பிரமணியர் திருவிருத்தம் ( 12th பாடல் - கண்ணேறு )

கண்ணேறு வாராது பிணியொன்று சேராது

கவலைப் படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது

விண்ணேறும் அணுகாது கன்மவினை தொடராது
விடமச்சுரம் வராது
வெய்யபூ தம்பில்லி வஞ்சனைகள் தொடரா
விடம்பரவு செந்துமடரா

எண்ணேறு செனனங்கள் கிடையாது காலபயம்
ள்ளளவு மே யிரா (து)இவ்
ழைக் கிரங்கி அருள் தெய்வமுனை யல்லாமல்
ன்னமொரு தெய்வம் உண்டோ(உளதோ).

தண்ணேறு கங்கைமலை மங்கையருள் தங்கமே
சரசகோ பாலன் மருகா
சதுர்மறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.

 வாழ்த்து

 வான்முகில் வழாது பெய்க

         மலிவளம் சுரக்க மன்னன்
 கோன்முறை அரசு செய்க
         குறைவிலாது உயிர்கள் வாழ்க
 நான்மறை அறங்கள் ஓங்க
         நற்றவம் வேள்வி மல்க
 மேன்மைகொள் சைவ நீதி
         விளங்குக உலக மெல்லாம்.

 வாழ்க அந்தணர் வானவர்

 வாழ்க அந்தணர்

   வானவர் ஆனினம்
 வீழ்க தண்புனல்
   வேந்தனும் ஓங்குக
 ஆழ்க தீயதெல்
   லாம்அரன் நாமமே
 சூழ்க வையக
  முந்துயர் தீர்கவே.

*************************************************

36 comments:

  1. Very pleasing,I am blessed to have a great time to read this gel maaral with meanings

    ReplyDelete
  2. Know words to express when I read and hear this song,lord muruMur has penetrated his vel deep in my heart

    ReplyDelete
  3. Vel maaral recitation gives me peace and my anxiety is removed...vel vel muruga

    ReplyDelete
  4. Thanks a lot for posting this.how to download this as PDF.
    Nandri .

    ReplyDelete
    Replies
    1. Pls send mail request to sivaphonebook@gmail.com, I will send pdf , if u can forward that pdf to more people

      Delete
    2. Sir, please vel maaral in PDF Format

      Delete
  5. ஆராதனைப் பாடல்களையும் வெளியிட்டால் மிக நன்று.

    ReplyDelete
  6. நிம்மதி கிடைக்கிறது

    ReplyDelete
  7. இதனைப் பாராயணம் செய்வதால் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது

    ReplyDelete
  8. நன்றி இறைவனுக்கு

    ReplyDelete
  9. ஐயா PDF format send please

    ReplyDelete
  10. ஐயா PDF format send please

    ReplyDelete
  11. feeling happy to know the meaning of vel maaral...

    ReplyDelete
  12. Great moments . Reading velmaaral.

    ReplyDelete
  13. https://youtu.be/SrJYBMKE__I

    ReplyDelete
  14. Thanks a lot for sharing this God bless you

    ReplyDelete
  15. I have started reading Vel maral mantram for last 8 months onwards, it's give me peace & more positive vibration in my life. It's a miracle one. Thanks. No words to express those changes in my life.

    ReplyDelete
  16. வேல் மாறல் மஹாமந்திரம் பாராயணம் மன நிம்மதியை தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை நன்றி

    ReplyDelete
  17. I AM FORTUNATE TO HAVE THE MAHA MANTHRAAAAAA

    ReplyDelete
  18. Romba nimmathi kedakarathu
    Muruga muruga charanam

    ReplyDelete
  19. Request Thiru. SIVA to forward this Padal in Tamil in PDF.My E Mail ID "bkrish33@gmail.com"
    From, Krishnamurthy Balasubramanian

    ReplyDelete
  20. Please send a PDF of this entire document to vsvraghavan@gmail.com. I'll be great full to you. Thank you. Best Regards.

    ReplyDelete
  21. Please send a PDF of this entire document to vsvraghavan@gmail.com. I'll be great full to you. Thank you. Best Regards.

    ReplyDelete
  22. Anyone can help for Telugu Lyrics

    ReplyDelete
  23. Thanks for writing this blog, You may also like the Murugan vel

    ReplyDelete