Sunday, November 12, 2023

Bhavani Ashtakam stotram lyrics with meaning in tamil - பவானி அஷ்டகம் - பவான்யஷ்டகம்

Bhavani Ashtakam - பவானி அஷ்டகம் 
பவான்யஷ்டகம் ஶ்ஶ்ரீமத் ஆதி ஶங்கராசார்யவிரசிதம்



கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥

ந தாதோ ந மாதா ந பந்துர்ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருʼத்யோ ந பர்தா ।
ந ஜாயா ந வித்யா ந வ்ருʼத்திர்மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 1॥

தந்தையோ, தாயோ, உறவினரோ,கொடையாளர்களோ, உதவி செய்பவர்களோ, மகனோ, மகளோ, அண்டிப் பணி செய்யும் பணியாளர்களோ, கணவனோ, மனைவியோ, இவ்வுலகியல் அறிவோ, உத்தியோகமோ தர இயலாத அடைக்கலம் அருளும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

பவாப்தாவபாரே மஹாது:கபீரு
ப்ரபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த: ।
குஸம்ஸாரபாஶப்ரபத்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 2॥

இம்முடிவில்லா பிறவிப் பெருங்கடலில் அதிகம் துன்புற்று, மிகவும் பயந்து, அதிகப்படியான இச்சைகளாலும், பேராசையாலும் மாயை என்னும் பெரும்போதைக்கு அடிமையாகி, எப்பொழுதும் துன்பகரமான ஸம்ஸாரத்திற்கு அடிமைப்பட்டு கிடந்துழலும் எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ந ஜாநாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம் ।
ந ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 3॥

தானதர்மங்கள் செய்வதோ, த்யானமோ,யோக சாஸ்திரமோ, மந்திர தந்திரங்களையோ, ஸ்தோத்திரங்களையோ, பூஜை முறைகளையோ, சித்தபுருஷர்கள் உபதேசிக்கும் ஆத்மஞானத்தை தேடும் யோக மார்க்கத்தில் சிரத்தையோ இல்லாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி தீர்தம்
ந ஜாநாமி முக்திம் லயம் வா கதாசித் ।
ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி மாதர்-
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 4॥

புண்ணியச்செயல்களையோ, புனித யாத்திரைகளையோ, முக்தி தேடும் வழிமுறைகளையோ, தன்னை அறிவதில் லயிக்கும் சிரத்தையோ, பக்திமார்க்கத்தையோ, விரதங்கள் அனுஷ்டிப்பதையோ அறியாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

குகர்மீ குஸங்கீ குபுத்தி: குதாஸ:
குலாசாரஹீன: கதாசாரலீன: ।
குத்ருʼஷ்டி: குவாக்யப்ரபந்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 5॥

தீயவர்களுடன் சேர்ந்து தீமைகள் புரிந்து, 
தீயவற்றை நினைத்து, தீய பணியாளனாக இருந்து (தீமைகளுக்கு அடிமைப்பட்டு தாசனானவன் என்றும் கொள்ளலாம்), குலாசாரத்தை விட்டு, தவறான விஷயங்களிலேயே ஈடுபட்டு, கண்கள் தவறான விஷயங்களை பார்த்தும், நாவோ தவறான விஷயங்களை பேசிக்கொண்டும் இருக்க, எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

ப்ரஜேஶம் ரமேஶம் மஹேஶம் ஸுரேஶம்
தினேஶம் நிஶீதேஶ்வரம் வா கதாசித் ।
ந ஜாநாமி சான்யத் ஸதாஹம் ஶரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 6॥

படைப்புக் கடவுளான பிரம்மனையும், லக்ஷ்மிதேவியின் பதியான விஷ்ணுவையும், உயர்ந்த கடவுளான சிவனையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும், நாளின் கடவுளான சூரியனையும், இரவின் கடவுளான சந்திரனையும், மற்ற கடவுள்களையும் அறியாத எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே சானலே பர்வதே ஶத்ருமத்யே ।
அரண்யே ஶரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி॥ 7॥

விவாதங்களின் பொழுதும், சண்டைசச்ரவுகளின் பொழுதும், விரக்தி ஏற்படும் பொழுதும், மன வருத்தத்துடன் இருக்கும் பொழுதும், மாயையில் அடிமையுற்று போதையுற்ற பொழுதும், மனம் பிறழ்ந்த நிலையிலும், அயல் தேசத்திலும், நீரிலும், நெருப்பிலும் மலைகளின்மேலும், குன்றுகளின் மேலும், எதிரிகளிடமிருந்தும், கானகத்திலும் எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன். 

அநாதோ தரித்ரோ ஜராரோகயுக்தோ 
மஹாக்ஷீண - தீன: ஸதா ஜாட்யவக்த்ர: ।
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரநஷ்ட: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி ॥ 8॥

உதவியற்ற நிலையிலும், ஏழ்மையுற்ற நிலையிலும், வயது முதிர்ந்து, வியாதிகளால் தளர்வுற்று, பார்ப்பதற்கு முகம் வெளிறித் தோன்றும் காலத்திலும், துன்பங்களிலும், துயரங்களிலும் எம்மைத் தொலைத்து வாழ்வின் விளிம்பில் இருக்குத்பொழுதும், எமக்குத் தக்க அடைக்கலம் தந்து காப்பாற்றும் அன்னை பவானியே, உன்னைச் சரணடைந்தேன்.

॥ இதி ஶ்ரீமத் ஆதி ஶங்கராசார்யவிரசிதம் பவான்யஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

No comments:

Post a Comment