லட்சுமி நரசிம்மர் 108 போற்றி
- ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
- ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
- ஓம் யோக நரசிங்கா போற்றி
- ஓம் ஆழியங்கையா போற்றி
- ஓம் அக்காரக் கனியே போற்றி
- ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
- ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
- ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
- ஓம் சங்கரப்ரியனே போற்றி
- ஓம் சார்ங்க விற்கையா போற்றி
- ஓம் உலகமுண்ட வாயா போற்றி
- ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
- ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
- ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
- ஓம் தாமரைக் கண்ணா போற்றி
- ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
- ஓம் ஊழி முதல்வா போற்றி
- ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
- ஓம் ராவணாந்தகனே போற்றி
- ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
- ஓம் பெற்ற மாளியே போற்றி
- ஓம் பேரில் மணாளா போற்றி
- ஓம் செல்வ நாரணா போற்றி
- ஓம் திருக்குறளா போற்றி
- ஓம் இளங்குமார போற்றி
- ஓம் விளக்கொளியே போற்றி
- ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
- ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
- ஓம் எங்கள் பெருமான் போற்றி
- ஓம் இமையோர் தலைவா போற்றி
- ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
- ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
- ஓம் வேதியர் வாழ்வே போற்றி
- ஓம் வேங்கடத்துறைவா போற்றி
- ஓம் நந்தா விளக்கே போற்றி
- ஓம் நால் தோளமுதே போற்றி
- ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
- ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
- ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
- ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி
- ஓம் மூவா முதல்வா போற்றி
- ஓம் தேவாதி தேவா போற்றி
- ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
- ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
- ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
- ஓம் வட திருவரங்கா போற்றி
- ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
- ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
- ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
- ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
- ஓம் மாலே போற்றி
- ஓம் மாயப் பெருமானே போற்றி
- ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
- ஓம் அருள்மாரி புகழே போற்றி
- ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
- ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
- ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
- ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
- ஓம் முந்நீர் வண்ணா போற்றி
- ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
- ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
- ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
- ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
- ஓம் அரவிந்த லோசன போற்றி
- ஓம் மந்திரப் பொருளே போற்றி
- ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
- ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
- ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
- ஓம் பின்னை மணாளா போற்றி
- ஓம் என்னையாளுடையாய் போற்றி
- ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
- ஓம் நாரண நம்பி போற்றி
- ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
- ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
- ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
- ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
- ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
- ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
- ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
- ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
- ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
- ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
- ஓம் இனியாய் போற்றி
- ஓம் இனிய பெயரினாய் போற்றி
- ஓம் புனலரங்கா போற்றி
- ஓம் அனலுருவே போற்றி
- ஓம் புண்ணியா போற்றி
- ஓம் புராணா போற்றி
- ஓம் கோவிந்தா போற்றி
- ஓம் கோளரியே போற்றி
- ஓம் சிந்தாமணி போற்றி
- ஓம் சிரீதரா போற்றி
- ஓம் மருந்தே போற்றி
- ஓம் மாமணி வண்ணா போற்றி
- ஓம் பொன் மலையாய் போற்றி
- ஓம் பொன்வடிவே போற்றி
- ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
- ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
- ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
- ஓம் தயரதன் வாழ்வே போற்றி
- ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
- ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
- ஓம் வள்ளலே போற்றி
- ஓம் வரமருள்வாய் போற்றி
- ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
- ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
- ஓம் பத்தராவியே போற்றி
- ஓம் பக்தோசிதனே போற்றி
No comments:
Post a Comment