சாயி பாபா காலை ஆரத்தி பாடல்:
கணேசா! சுவாமி!
கரம் குவித்துத் துதிக்கிறோம்
ஆரத்தி பாடுவதற்கு - சீரடி சாயி பகவான்
ஆரத்தி பாடுவதற்கு
அருள் புரிய வேண்டும் ஐயா!
கற்பகமே! அற்புதமே!
கணபதியே! சரணம் ஐயா!
கதிரவனும் வணங்கும் காலை ஆரத்தி
சாயி பாபா காலை ஆரத்தி - 1
கரங்களைக் குவித்து உம்
பாதங்களில் தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் சாயிநாதரே!
பக்தியுடனோ இல்லாமலோ உமது
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே சத்குரு நாதா!
என்றும் உமது திருப்பாதங்களைச்
சேவிக்க வேண்டும் அப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளேதாருமையா
துக்காராம் வேண்டுகிறார் எமது
நாமஜபம் கேட்டு, அருள்கூர்ந்து
எம் சம்சாரப்பற்றை நீக்கிடுங்களே
கரங்களைக் குவித்து உம்
பாதங்களில் தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் சாயிநாதரே!
சாயி பாபா காலை ஆரத்தி - 2
அதிகாலை வேளை பாண்டுரங்கா
பள்ளி எழுந்தருள்வீர்
வைஷ்ணவர் கூட்டம்
கருட ஸ்தம்பம்வரை அங்கே நிற்கின்றார்
முக்கிய வாசல் வரைதேவர்கள்
கூட்டமாக நின்று, மிருதங்கத்தாள இசையுடனே
பரவசமடைந்து பாடுகிறார்
சுகர் சனகர் நாரதர் தும்புரு
ஆகிய பக்தர்கள் கூட்டமும்
சூலம் டமரு ஏந்தியவாறு
கிரிஜாபதியும் உள்ளார்
கலியுக பக்தர் நாமதேவர்
நின்னுகிட்டு பாடுகிறார்
ஜனாபாயும் பின்னால் அங்கே
காத்துநிற்கின்றாள்.
சாயி பாபா காலை ஆரத்தி - 3
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால்
பாவங்கள் விலகிடுமே
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால்
பாவங்கள் விலகிடுமே
சம்சாரத்துன்பம் வியாதிகள் நீக்கி
ஜடங்களான எம்மைக் காத்தருள்வீரே
சம்சாரமாகிய இருண்ட இரவு
உம்மைவிட்டு அகன்றதே
உமது யோக மாயை அஞ்ஞானிகள் எம்மை
ஆசையில் ஆழ்த்தியதே - அந்த
ஆசையைப் போக்கும் சக்திகள் எமக்குச்
சிறிதும் இல்லையே
ஏ! சாயிநாத மகராஜ்
உம் முக தரிசனம் தந்து காப்பீரே
அஞ்ஞானிகளான நாங்கள் எவ்வாறு
உம் பெருமைதனை வர்ணிபபோம்
உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும்
கவிபிரமனுமே சோர்ந்து விட்டனர்
அருள் கூர்ந்து உமது பெருமையை
நீரே சொல்லவே பிரார்த்திப்போம்
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால்
பாவங்கள் விலகிடுமே
சரணம் சரணம் என்று பக்தர்கள் பலரும்
வாசலில் நிற்கின்றனர் - மலர்
தாமரை முகதரிசனத்தைத் தந்து
அவர்களைக் காத்தருள்வீரே
யோக நிலையில் உள்ள உம்மைத் தரிசித்து
உள்ளம் உவகை கொள்கின்றது
உமது வார்த்தை அமுதத்தைப் பருகி
மேலும் உள்ளம் மகிழ்கின்றது
ஆபத்தில் உதவும் லக்ஷ்மிநாதா
குழந்தைகள் எம்மைப் பார்ப்பீரே
தாபத்தை நீக்கி அருள்வீரே
சுயநலத்தை நீக்கிப் பொறுத்தருள்வீரே
சாயிநாத மகராஜ் - உன்
தரிசனம் தந்து காப்பீரே
ஓ சாயிநாத மகராஜ் - உன்
தரிசனம் தந்து காப்பீரே
உம்மை வர்ணிக்க ஆதிசேஷனும்
கவிபிரமனுமே சோர்ந்து விட்டனர்
அருள் கூர்ந்து உமது பெருமையை
நீரே சொல்லவே பிரார்த்திப்போம்
பள்ளி எழுந்தருள்வீர் ஸ்ரீசாயிநாதா குருவே - உம்
பாத கமலங்களைத்தரிசித்தால்
பாவங்கள் விலகிடுமே
பாண்டுரங்கா எழுந்தருள்வீர்
அனைவருக்கும் தரிசனம் தந்தருள்வீர்
இருள் நீக்கித் துயில் களைந்து
உதயமாகி விட்டது
சாதுக்கள் முனிவர்கள் மகான்கள்
யாவரும் இங்கே இருக்கின்றார்
தூக்கமாகிய சுகத்தை நீக்கித்
தரிசனம் தந்தருள்வீர்
சாயி பாபா காலை ஆரத்தி - 4
ரங்க மண்டபத்திலும் ஆசாரவாசலிலும்
பக்தர்கள் யாவரும் ஆவலோடு இங்கே
காத்திருக்கின்றார்கள்
சாயிநாதரை விழிக்கச்செய்ய
ரகுமாயியை வேண்டுகின்றோம்
தேவர்களை எல்லாம் அழைத்து வந்து
கருடனும் அனுமனும் துதிக்கின்றார்
கதவு திரந்தது தரிசனம் கிடைத்தது
பேரானந்தம் அடைந்தது
விஷ்ணுதாசன் நாமதேவன்
ஆரத்தி ஏந்துகின்றார்
சாயி பாபா காலை ஆரத்தி - 5
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
காலை ஆரத்தி எடுப்போம்
தீபாராதனை செய்வோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
உறவினர்களே எழுந்திருங்கள்
லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம்
தினமும் தீப ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
சாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம்
காலை ஆரத்தி எடுப்போம்
தினமும் ஆரத்தி எடுப்போம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
மனத்திடத்துடன் பாபாவைப் பணிவோம்
கிருஷ்ண நாதா தத்தா சாயி
உம்மை மனத் திடத்துடன் பணிவோம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
காலை ஆரத்தி எடுப்போம்
தீபாராதனை செய்வொம்
பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம்
ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம்
சாயி பாபா காலை ஆரத்தி - 6
சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர்
காமம் பகை பொறாமை ஆகியவற்றைத்
திரியாக்கி வைராக்கியம் என்ற நெய்யில் நனைத்தோம்
சற்குரு சாயிநாதா!
பக்தி என்ற நெருப்பால் விளக்கை ஏற்றினோம் சாயிநாதா
எம்குரு விளக்கை எரியச்செய்து
துர்க்குணங்களை நீக்கிவிட்டீர் - எங்கள்
அறியாமை இருளை அழித்து
உயிர்களுக்கு உம்மை அறியச்செய்தீர்
சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர்
மண்ணிலும் விண்ணிலும் நிறைந்தவரே
பக்தர்கள் மனத்தில் இருப்பவரே
தத்தாத்ரேயரே சீரடியில்
என்றும் சாயிநாதராய் இருப்பவரே
பக்தர்களின் துன்பங்களை நீக்கிச்
சுக அனுபவங்கள் கொடுக்கின்றீர்
கலியுகத்தில் உம்மைப் போல
பெரும் தெய்வம் வேறு எவரும் இல்லை
சாயிநாதா உமக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
உம் குழந்தைகள் எங்கள் சேவையை ஏற்று
உங்கள் உருவத்தைக் காட்டி அருள்வீர்
சாயி பாபா காலை ஆரத்தி - 7
பக்தி நிறைந்த மனத்துடன் காலையில்
ஜோதியைத் தரிசிக்கின்றோம்
ஐந்து பிராணன்கள் என்ற ஜீவனால்
தீப ஆரத்தி செய்கின்றோம்
பண்டரிநாதன் பாதம் தனில் தலையை வைத்து வணங்கி
தலையை வைத்து வணங்கி
ஆரத்தி செய்கின்றோம் தீப ஆரத்தி செய்கின்றோம்
இப்பேரின்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது
உமது முக தரிசனம் கோடி பாவத்தைப் போக்கிடுமே
ராயியும் ரகுமாயியும் உமது இருபுறமும் நிற்கின்றனர்
மயில் தோகையின் சாமரத்தால் பக்தியுடன் வீசுகின்றனர்
ஜோதி மயமான ஆரத்தியால் பாபா ஜொலிக்கிறார்
அழகே உருவான விட்டலுக்குக் காலை ஆரத்தி எடுக்கின்றோம்
சாயி பாபா காலை ஆரத்தி - 8
சாதுக்களே எழுங்கள்
மகான்களே எழுங்கள்
உங்கள் நலனை வேண்டுங்கள்
மனித உடல் அழிந்த பின்
கடவுளைப் பணிவது இயலாது
விடிகாலை வேளையில் எழுந்து
செங்கல்லின் மீது நிற்கின்ற விட்டலின்
பாதங்களையும் அருள் நோக்கையும்
பக்தியுடன் பணியுங்கள்
எழுங்கள் எழுங்கள் பக்த கோடிகளே
விரைந்து ஆலயம் செல்லுவோம்
காலை ஆரத்தியைத் தரிசித்துப்
பாவங்கள் அனைத்தையும் போக்குவோம்
தேவர்கள் தேவா! ருக்மணிநாதா!
துயில் நீங்கிப் பள்ளி எழுந்திடுவீர்
திருஷ்டி தோஷம் ஏற்படாதிருக்க
திருஷ்டி கழித்திட அனுமதி தருவீர்
கோயிலின் வாயிலில் மங்கள வாத்தியங்கள்
இனிமையாய் இசைக்கின்றன
சற்குரு நாதரின் காலை ஆரத்தியும்
சிறப்பாய் நடக்கிறது
ஆசார வாசலில் சிங்கநாதம் பேரிகை
ஆனந்தமாய் ஓலிக்கின்றது
கேசவராஜ விட்டலின் பாதத்தை
நலமுடன் வணங்குகிறார்
நாம தேவர் நலமுடன் வணங்குகிறார்
சாயி பாபா காலை ஆரத்தி - 10
காலை வேளையில் கதிரவன் பவனி வருகிறான்
உலகிற்கு நன்மை தருகிறான்
இந்த வேளையில் குருத்தியானம் செய்பவர்களை
ஒருபோதும் கலி நெருங்க மாட்டான்
மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று
சாயிநாதரை வணங்குகிறோம்
இருள் நீக்கும் ஆதவன் போலச் சற்குருநாதர்
அஞ்ஞானம் இருளை அழிக்கிறார்
கதிரவன் போல இல்லாமல் சாயிநாதர் இரவிலும் பகலிலும் ஜொலிக்கிறார்.
மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று
சாயிநாதரை வணங்குகிறோம்
குரு அருளினால் கிடைத்த ஞானம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
சமர்த்த குருவே சாயி நாதர்
எமக்கு அதனை அளிப்பீரே.
மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று
சாயிநாதரை வணங்குகிறோம்
சூரியன் தோன்றிச் சோம்பலை நீக்கி
உலக உயிர்களை இயக்குகிறான்
சத்குரு சாயி துர்க்குணங்களை நீக்கி
உலக மக்களை இயக்குகிறார்
மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று
சாயிநாதரை வணங்குகிறோம்
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிலும்
ஈடு இணையற்றவர் சற்குருநாதர்
மேலான பலன்களைத் தருவதில் உம்மையே உமக்கு நிகராகப் பக்தர்கள் நினைக்கிறார்கள்
மன ஆசைகள் யாவும் நிலையாக நீங்க வேண்டும் என்று
சாயிநாதரை வணங்குகிறோம்
சாயி பாபா காலை ஆரத்தி - 11
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
இவ்வுலகம் முழுவதும் பொய்யால்
நிறைந்தது என்று நீர் அறிவீரே
இவ்வுலகம் முழுவதும் பொய்யால் நிறைந்தது என்று நீர் அறிவீரே
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
ஞானமற்றவர் குருடர் - எங்களுக்குத் தரிசனம் தந்தருள்வீரே
ஞானமற்றவர் குருடர் - எங்களுக்குத் தரிசனம் தந்தருள்வீரே
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
நாவு சோர்ந்து விட்டது இனி என்ன செய்வேன் என்று பணிகிறார் தாஸகணும் மகாராஜ்
நாவு சோர்ந்து விட்டது இனி என்ன செய்வேன் என்று பணிகிறார் தாஸகணு மகாராஜ்
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
சாயி நாதா உமதருளாலே - உன்
குழந்தைகள் எங்களைக் காப்பாற்றுவீரே.
சாயி பாபா காலை ஆரத்தி - 12
தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா
தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா
மோகாந்த இருளில் - தவிக்கின்றோம் நாங்கள்
மோகாந்த இருளில் - தவிக்கின்றோம் நாங்கள்
ஆண்டவனை அறியாத - ஆண்டவனை அறியாத
அஞ்ஞானி நாங்கள் - அஞ்ஞானி நாங்கள்
தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா
வீணாகக் கழித்தோம் - காலத்தை எல்லாம்
வீணாகக் கழித்தோம் - காலத்தை எல்லாம்
மசூதியை பெருக்கும் - மசூதியை பெருக்கும்
துடைப்பமாய் இருப்போம் - துடைப்பமாய் இருப்போம்
தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா
எம்மை ஆளும் தெய்வம் - நீர்தானே சாயீ
எம்மை ஆளும் தெய்வம் - நீர்தானே சாயீ
எம்மை ஆளும் சற்குரு - எம்மை ஆளும் சற்குரு
நீரே அருள் புரிவீரே - நீரே அருள் புரிவீரே
தாய் தந்தை சகோதரன் - சகலமும் நீரே
எம் பிரார்த்தனை ஏற்று
அருள் புரிவாய் பாபா - அருள் புரிவாய் பாபா
சாயி பாபா காலை ஆரத்தி - 13
ஏழைகளாம் நாம் ஸ்ரீஹரிக்கு
உண்ணுவதற்கு எதை கொடுப்போம்
ஜெகந்நாதனாக விளங்கும் உமக்கு
இந்த எளிய ரொட்டியை எப்படிக் கொடுப்போம்
நள்ளிரவு தாண்டியும் உம்மைத்
தரிசிக்கவில்லை என்றாலும்
எம் சிந்தை உன்னிடத்தில்
என்றும் இருக்குமாறு அருள் புரிவீரே
ஜெகந்நாதனாக விளங்கும் உமக்கு
இந்த எளிய ரொட்டியை எப்படிக் கொடுப்போம்
பக்தர்கள் - பலவகையான
நைவேத்தியங்களுடன் இங்கே
ஜெகந்நாதனாக விளங்கும் - உன்
காலை ஆரத்திக்கு ஏங்தி உள்ளனர்
உன் காலை ஆரத்திக்கு ஏங்கி உள்ளனர்.
சாயி பாபா காலை ஆரத்தி - 14
ஸ்ரீ சத்குரு சாயி பாபா - ஸ்ரீ சத்குரு சாயி பாபா
இப்பூவுலகிபாவிகம் ஒன்றும் அறியாத பாவிகள்
நெறி இல்லாதவர் - வழி தெரியாதவர்
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள்
நாங்கள் ஏதும் அறியாத பாவிகள்
சாந்தி பொறுமையில் மேருமலை - எம்மை
சம்சாரம் என்ற கடல் இருந்து
சத்குரு சாயிநாதா காத்தருள்வீரே
சத்குரு சாயிநாதா காத்தருள்வீரே
திருவருள் தந்திடும் குருவரா
பயம் என்ற கடலில் மூழ்கும் எம்மைப்
பாசம் மிகக் கொண்டு
பரந்தாமா எம்மைக் காப்பாற்றி அருள்வீரே
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத மகராஜ் கீ ஜெய்!!!!
No comments:
Post a Comment