Monday, January 20, 2020

Hanuman chalisa tamil lyrics - ஹனுமான் சாலிசா


ஹனுமான் சாலிசா : Hanuman Chalisa in Tamil


।। தோஹா ।।

ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ, நிஜமன முகுர ஸுதாரி |
பரணௌ ரகுவர விமலயச, ஜோ தாயக பலசாரி ||

புத்தி-ஹீன தனு-ஜானிகே, ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஸ விகார் ||


।। சௌபாயி ।।

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
     ஜய கபீஸ திஹு லோக உஜாகர || 1 ||
ராமதூத அதுலித பலதாமா |
     அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா || 2 ||
 மஹாவீர விக்ரம பஜரங்கீ |
     குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||
 கஞ்சன பரண விராஜ ஸுவேஸா |
     கானன குண்டல குஞ்சித கேஸா || 4 ||
 ஹாத் வஜ்ர ஔ த்வஜா விராஜை |
     காந்தே மூஞ்ஜ ஜனேவு ஸாஜை || 5||
 ஸங்கர ஸுவன கேஸரீ நந்தன |
     தேஜ ப்ரதாப மஹா ஜக-வந்தன || 6 ||
 வித்யாவான குணீ அதி சாதுர |
     ராம காஜ கரிபே கோ ஆதுர || 7 ||
 ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா |
     ராம-லகன ஸீதா மன பஸியா || 8||

( இராம லக்ஷ்மண ஜானகி, ஜய போலோ ஹனுமானகீ )

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |
     விகட ரூபதரி லங்க ஜராவா || 9 ||
 பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |
     ராமசம்த்ர கே காஜ் ஸம்வாரே || 10 ||
 லாய ஸஜீவன் லகன ஜியாயே |
     ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||
 ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
     தும மம ப்ரிய பரத ஸம பாயீ || 12 ||
 ஸஹஸ வதன தும்ஹரோ யஸ-காவை |
     அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||
 ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஸா |
     நாரத ஸாரத ஸஹித அஹீஸா || 14 ||
 யம குபேர திக்-பால ஜஹாந் தே |
     கவி கோவித கஹி ஸகை கஹா தே || 15 ||
 தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
     ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||

( இராம லக்ஷ்மண ஜானகி, ஜய போலோ ஹனுமானகீ )

 தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா |
     லங்கேஸ்வர பய ஸப் ஜக ஜானா || 17 ||
 யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
     லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||
 ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
     ஜலதி லாந்தி கயே அசரஜ நாஹீ || 19 ||
 துர்கம காஜ ஜகத கே ஜேதே |
     ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||
 ராம துவாரே தும ரகவாரே |
     ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே || 21 ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஸரணா |
     தும ரக்ஷக காஹூ கோ டர்னா || 22 ||
ஆபன தேஜ ஸம்ஹாரௌ ஆபை |
     தீனோம லோக ஹாங்க தே காம்பை || 23 ||
பூத பிஸாச நிகட நஹி ஆவை |
     மஹவீர ஜப் நாம ஸுனாவை || 24 ||

( இராம லக்ஷ்மண ஜானகி, ஜய போலோ ஹனுமானகீ )

 நாஸை ரோக ஹரை ஸப பீரா |
     ஜபத நிரந்தர ஹனுமத வீரா || 25 ||
ஸங்கட ஸே ஹனுமான சுடாவை |
     மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||
 ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
     தினகே காஜ் ஸகல தும ஸாஜா || 27 ||
 ஔர மனோரத ஜோ கோயி லாவை |
     தாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||
 சாரோ யுக ப்ரதாப தும்ஹாரா |
     ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||
 ஸாது ஸந்த கே தும ரக்வாரே |
     அஸுர நிகந்தன ராம துலாரே || 30 ||
 அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா |
     அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||
 ராம ரஸாயன தும்ஹரே பாஸா |
     ஸதா ரஹௌ ரகுபதி கே தாஸா || 32 ||

( இராம லக்ஷ்மண ஜானகி, ஜய போலோ ஹனுமானகீ )

தும்ஹரே பஜன ராம கோ பாவை |
     ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை || 33 ||
அந்த கால ரகுபதி புர ஜாயீ |
     ஜஹா ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||
 ஔர தேவதா சித்த ந தரயீ |
     ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||
 ஸங்கட ஹரை மிடை ஸப பீரா |
     ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||
 ஜய் ஜய் ஜய் ஹனுமான கோஸாயீ |
     க்றுபா கரோ குருதேவ கீ நாயீ || 37 ||
 ஜோ சத பார பாட கர கோயீ |
     சூடஹி பந்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||
 ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |
     ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா || 39 ||
 துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
     கீஜை நாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||

( இராம லக்ஷ்மண ஜானகி, ஜய போலோ ஹனுமானகீ, ஜய போலோ ஹனுமானகீ )


।। தோஹா ।।

பவன தனய ஸங்கட ஹரண, மங்கள மூரதி ரூப் |
ராம லகன ஸீதா ஸஹித, ஹ்றுதய பஸஹு ஸுர பூப ||


ஸியாவர ராமசந்த்ரகீ ஜய |
பவனஸுத ஹனுமானகீ ஜய |
போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய |


------------------------------

Sunday, January 19, 2020

108 Ayyappan Sarana Gosham Tamil - 108 ஐயப்ப சரண கோஷம்

108 ஐயப்ப சரண கோஷம்



1. சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. கானக வாசனே சரணம் ஐயப்பா
80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
105. சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா!

Thiruneetru Pathigam with lyrics in tamil | திருநீற்றுப் பதிகம்

திருநீற்றுப் பதிகம்





மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.       || 1 ||

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. || 2 ||

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.               || 3 ||

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.          || 4 ||

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.          || 5 ||

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.         || 6 ||

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே.       || 7 ||

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே.     || 8 ||

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே.        || 9 ||

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே.  || 10 ||

ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.                || 11 ||

--- சுபம் ---

Kolaru Pathigam lyrics in Tamil - கோளறு பதிகம்

கோளறு பதிகம்




வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
          மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி
          சனி பாம்பிரண்டும்  உடனே
ஆசறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 1 ||

என்பொடு கொம்பொடு  ஆமை இவை மார்பு  இலங்க
          எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து, என்
          உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஓன்றொடு ஏழு பதினெட்டொடு, ஆறும்
          உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 2 ||

உருவளர் பவளமேனி ஒளிநீறு  அணிந்து
          உமையோடும், வெள்ளை விடைமேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்,
திருமகள், கலையது  ஊர்தி, செயமாது, பூமி,
          திசை தெய்வம்  ஆன பலவும்,
அருநெதி; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 3 ||

மதி நுதன் மங்கையோடு, வடஆல் இருந்து
          மறை யோதும்  எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன், அங்கி, நமனோடு தூதர்
          கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 4 ||

நஞ்சு அணி கண்டன், எந்தை மடவாள் தனோடும்
          விடையேறு நங்கள் பரமன்,
துஞ்சு இருள், வன்னி கொன்றை முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உருமிடியும் மின்னும்
          மிகையான பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார்  அவர்க்கு மிகவே.          || 5 ||

வாள்வரி அதளஅது ஆடை வரி கோவணத்தர்
          மடவாள் தனோடும் உடனாய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து, என்
          உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
          கொடு நாகமோடு கரடி
ஆள்அரி நல்ல நல்ல, அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 6 ||

செப்பு இள முலை நன்மங்கை ஒருபாகமாக
          விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பு இள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகையான பித்தும்
          வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார்  அவர்க்கு மிகவே.          || 7 ||

வேள்பட விழிசெய்து அன்று, விடைமேல் இருந்து
          மடவாள் தனோடும் உடனாய்,
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து, என்
          உளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் றனோடும்
          இடரான வந்து நலியா;
ஆழ்கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 8 ||

பலபல வேடம் ஆகும்-பரன் நாரி பாகன்
          பசுவேறும் எங்கள் பரமன்,
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
          வருகாலம் ஆன பலவும்
அலைகடல் மேரு நல்ல; அவை நல்ல நல்ல
          அடியார் அவர்க்கு மிகவே.          || 9 ||

கொத்து அலர் குழலியோடு விசையற்கு நல்கு
          குணமாய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
          உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
          திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
          அடியார் அவர்க்கு மிகவே.          || 10 ||

தேன் அமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
          வளர் செம்பொன் எங்கும் திகழ,
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
          மறை ஞான ஞான முனிவன்,
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
          நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
          அரசாள்வர் ஆணை நமதே.          || 11 ||

--- சுபம் ---