Thursday, March 9, 2023

Uma Maheswara Stotram Lyrics in Tamil | ஸ்ரீ உமாமஹேச்வர ஸ்தோத்ரம்

உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

            ஸ்ரீ ஆதிசங்கரரால் அருளப்பட்டது இந்த உமாமஹேச்வர ஸ்தோத்திரம். உமாமகேச்வர விரத தினமான, புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று, விரதமிருந்து, சிவபெருமானை பக்தியுடன்  பூஜித்து, இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.  இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்பவர் , ஸர்வ சௌபாக்கியங்களையும் அடைந்து முடிவில் சிவலோகமடைவர் என்று பலஸ்ருதி கூறுகிறது.



நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்    (1)

நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்    (2)

நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!    (3)

நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (4)

நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (5)

நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (6)

நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (7)

நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (8)

நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (9)

நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்    (10)

நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (11)

நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!    (12)

ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோ ய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!!    (13)


No comments:

Post a Comment