Devotional song lyrics in Tamil and English. Bhakthi songs in Tamil, Hindi and English. Religious songs lyrics in English, Hindi & Tamil. பக்தி பாடல் வரிகள். Please Support Me! Thank You! நன்றி!
சண்முகக் கவசமானது மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. இதில் முதல் 12 பாடல்களின் முதல் எழுத்து உயிரெழுத்துக்களை ஆரம்பமாக வைத்து துவங்கும். அடுத்து வரும் 18 பாடல்களின் முதல் எழுத்து மெய் எழுத்துக்களை முதல் எழுத்துக்களை கொண்டு துவங்கும். இது இந்த பாடலின் சிறப்பம்சமாகும்.
சீர்த்தியாய்த் துதிகள் பாடித் திருவடி(க்கு) மலர்கள் தூவி ஆர்த்தியாய் வழிபாடாற்றும் அன்பரின் இதயக் கோயில் மூர்த்தியாய் விளங்கும் எங்கள் முதிர்பரங் குன்றின் வாழ்வாம் கார்த்திகேயன் கை வேலைக் காண்பதே யெமக்கு வேலை.
மாதவன் மகிழ்ந்(து) அளித்த மடந்தையர் இருபால் மேவ மேதகு மயிலின் மேல் ஓர் வெற்பினில் உதயமான ஆதவன் எனவே போற்ற ஆவினன் குடியில் வாழும் நாதன் செவ் வேளின் வேலை நாடுவ(து) எமக்கு வேலை.
பழனி
திண்ணணார் சுவைத்(து) அளித்த தீஞ்சுவைக் கறி சுவைத்த அண்ணணார் அணைத்துக் கண்ணே! அப்பனே! நீயே நேய வண்ணமாம் பழம் என்று ஓத மகிழ்ந்து தென் பழனி வந்த விண்ணவன் கரத்து வேலை விளம்புவ(து) எமக்கு வேலை.
பண்டாரப் பையன் என்பார், பரிந்(து) அவன் மணந்து கொண்ட பொண்டாட்டி இருவர் என்பார், பேசும் மெய்த் தெய்வம் என்பார் கொண்டாடத்தணிகை வெற்பிற் கோவில் கொண்டுள்ளான் என்பார் தண்டாமல் அவன்கை வேலைத் தரிசிப்ப(து) எமக்கு வேலை.
சென்னிமலை
விருப்பமும் வெறுப்பும் இல்லா விழுமிய முனிவர் தேவர் திருப்பதம் வணங்கி வாழ்த்தச், செருக்களத்(து) அசுரன் நெஞ்சப் பொருப்பினைப் பிளந்து, வஞ்சப் பொறுப்பினைத் துளைத்த சென்னிப் பொருப்பின் கரத்து வேலைப் போற்றுவ(து) எமக்கு வேலை.
குமரகோட்டம்
அப்பனே முருகா நீயே அரன் எனச் சரண் அடைந்தார் தப்பெலாம் குறியா(து) ஈன்றதாயெனப் பரிவு காட்டும் பொய்பிலான், குமரகோட்டப் புனிதன் என்(று) உலகம் போற்றும் ஒப்பிலான் கரத்து வேலை ஓதுவ(து) எமக்கு வேலை.
சிறுவாபுரி (சேக்கிழார் தாசன் இயற்றியது)
வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்
தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த
சிறுவை தன் வாழ்வாம் எங்கள் ஸ்ரீராமன் மருகனாகும்
அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.
ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து
செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர் செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.