Sunday, June 18, 2017

Dwatrimsha Namavali of Goddess Durga : Durga 32 Names - Tamil

ஸ்ரீ துர்காவின் 32 திரு நாமாக்கள்:-




துர்கா, துர்கார்த்தி-ஸமணி, துர்காபத்வி நிவாரிணி |
துர்கமச்சேதிணி , துர்க ஸாதிணி , துர்கநாஸிணி  ||

துர்கதோத்தாரிணி, துர்கநிஹந்த்ரீ, துர்கமாபஹா |
துர்கம-ஜ்ஞானதா, துர்க-தைத்ய-லோக தவாநலா ||

துர்கமா, துர்கமா-லோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணீ |
துர்கமார்க-ப்ரதா, துர்கம-வித்யா, துர்கமா-ஸ்ரிதா ||

துர்கம-ஜ்ஞான ஸம்ஸ்தானா, துர்கம-த்யான-பாஸிணீ |
துர்க-மோஹா, துர்கமகா, துர்கமார்த்த ஸ்வரூபிணீ ||

துர்கமாசுர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணீ |
துர்கமாங்கீ துர்கமதா, துர்கம்யா, துர்கமேஸ்வரீ ||

துர்கபீமா துர்கபாமா துர்கபா துர்கதாரிணீ |
நாமாவலிமிமாம் யஸ்தும் துர்காயா மம மானவஹ் ||

படேத் ஸர்வபயான் முக்தோ பவிஷ்யதி ந சன்ஷயஹ் ||

          ("யவர் ஒருவர் ஸ்ரீ துர்கையின் 32 திரு நாமாக்களையும், ஸ்ரீ துர்கா ஸ்தோத்ரத்தையும் ஸ்ரீ மஹிஷாசுரமர்தினி ஸ்தோத்ரத்தையும் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் தவறாமல் படிக்கிறார்களோ அவர்கள் சகல கஷ்டங்களிலிருந்து விடுபடுகின்றனர். ஜாதகத்தில் ராகு கேது கிரஹ சம்பந்த தோஷங்கள் தீர்ந்து சாந்தியையும் பெறலாம்".)


PARAMACHARIYA KRITHA KAMAKSHI STOTHRAM - TAMIL & English

காமாக்ஷி ஸ்தோத்ரம் 


பாராயணம் பயன் :


          கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்கட்டும் என்று ஜகத்குரு காஞ்சி மகா பெரியவா இயற்றி அனுகிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்ரம் இது.

          ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.


ஸ்தோத்ரம் :-

மங்கள சரணே! மங்கள வதனே! மங்கள தாயினி காமாக்ஷி |
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி ||

கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட வினாஷினி காமாக்ஷி |
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சமஜன ஸதயே காமாக்ஷி  ||   (குரு குஹ....)

க்ருஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நதஜன சுகதே காமாக்ஷி |
சிவ முக விநுதே பவ சுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி  ||   (குரு குஹ....)

பக்த சுமானஸ தாப நிவாரிணி மங்கள தாயினி காமாக்ஷி |
கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி  ||   (குரு குஹ....)

பர சிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி |
ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி  ||   (குரு குஹ....)


Mangala charane mangala vadane Mangala dhaayini kaamaakshi |
Guru guha janani kuru kalyaanam Kunjarai janani kaamaakshi ||

Kashta nivaarini ishta vidhayini Dushta vinaasini kaamaakshi
Himagiri thanaye mamahrudi nilaye Samajana sadaye kaamaakshi (guruguha..)

Gruhanutha charane gruhasutha daayini Nathajana sukhade kaamaakshi
Sivamukha vinuthe bhava sukhadaayini Navanava bhavathe kaamaakshi (guruguha..)

Bhaktha sumaanasa thaapa nivaarini Mangala daayini kaamaakshi
Kenopa nishath vaakya vinodini Devi paraasakthi kaamaakshi (guruguha..)

Parasiva jaaye varamuni bhaavye Akhilaandeswari kaamaakshi
Haridraa mandala vaasini nithye Mangala daayini kaamaakshi (guruguha..)

**********************************************************************************************************************************

மூகபஞ்ச சதியில் உள்ள... காமாட்சி அம்மனைத் துதிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது.

ச்ரியம் வித்யாம்தத்யாஜ்னனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

கருத்து: காமாட்சி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையானது தனம், வித்யை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே....! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எதைத்தான் கொடுக்காது?

பவுர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும். செல்வம், வித்யை, புத்திரப்பேறு, கீர்த்தி, உத்தியோகம் ஆகியவற்றை விரும்புவோர் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து பலன் பெறலாம்.

*********************************************************************

Saturday, June 17, 2017

Varanam Ayiram Andal Nacchiyar Thirumozhi in Tamil with meaning - வாரணம் ஆயிரம் நாச்சியார் திருமொழி - நல்ல வரன் மற்றும் மக்கள் வரம் பெற

வாரணம் ஆயிரம் - ஆண்டாள் நாச்சியார் திருமொழி 





மாப்பிள்ளை அழைப்பு 

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, 
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், 
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

(என்னைப்பெண் கேட்டு ஆயிரம் யானைகள் சூழ என் தலைவனான நாராயணன் வருகின்றான் என்ற செய்தியால் அவனை எதிர் கொண்டு வரவேற்க ஊர் மக்கள் எல்லாம் வழி எங்கும் தோரணங்கள் கட்டியும், பொன்னால் செய்த குடங்களைக் கொண்டு அலங்கரித்தும் இருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ.)
 
நிச்சயதார்தம் 

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, 
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் 
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

(தென்னை மற்றும் பாக்கு மரத்தால் வேயப்பட்ட பந்தலின் கீழ் நரசிம்மனும் மாதவனும் ஆகிய கோவிந்தன் நாளை திருமணம் என்று நாள் குறித்த அறிவிப்பால் காளை போல வீற்றிருந்ததை நான் கனவில் கண்டேன் தோழீ.)

பெரியோர்களின் அனுமதி 

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

(தேவர்களின் தலைவனான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் எல்லாம் வருகை புரிந்து என்னை மணப்பெண்ணாய் மணம் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து அவற்றை அணிந்து வந்தபின் மைத்துனியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலையை அணிவிக்க நான் கனவு கண்டேன் தோழீ.)

காப்பு கட்டுதல்

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

(நான்கு திசைகளிலிருந்தும் புனிதநீரினைக் கொண்டுவந்து அந்தணர்களில் சிறந்தோர் பலபேர்கள் மந்திரங்களால் ஓதி அப்புனிதநீரினைத் தெளித்து தாமரை மலர்களை அணிந்துள்ள புனிதமான கண்ணனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்ட நான் கனவு கண்டேன் தோழீ.)

பிடி சுற்றுதல் 

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் 
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

(கதிரவனைப் போல ஒளியுடைய தீபங்களையும், கலசங்களையும் ஏந்தி அழகிய இளம் பெண்கள் வரவேற்கும் போது வடமதுரை மன்னான கண்ணன் மணப்பந்தலின் நிலைப்படியினைத் தொட்டு வாத்தியங்கள் முழங்க உள்ள புகுந்து வர நான் கனவு கண்டேன் தோழீ.)

பாணி க்ரஹணம்

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

(மங்கல வாத்தியங்களான கெட்டி மேளமும், வரிகளையுடைய சங்கும் ஒலிக்க சிறந்த முத்துக்களால் அலங்காரலம் செய்யப்பட்ட பந்தலின் கீழ் மதுசூதனாகிய கண்ணபிரான் என் கையினைப் பற்றி என்னை மணம் புரிந்து கொண்டான் என நான் கனவு கண்டேன் தோழீ.) 

ஸப்தபதி

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!

(நல்ல சொற்களைப் பேசுபவர்கள் தங்களின் வாயால் மறைச் சொற்களைக் கூற சூரியன் ஒளியில் பதப்படுத்திய பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கொண்டு வளர்க்கபப்ட்ட அக்னியை யானையைப் போன்றவனாகிய கண்ணபிரான் என் கையினையைப் பிடித்து வலம் வர நான் கனவு கண்டேன் தோழீ.)

அம்மி மிதித்தல்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!

(இந்தப் பிறவிக்கு மட்டுமில்லாமல் ஏழேழ் பிறவிக்கும் நம்முடைய நற்கதிக்கு காரணமானவனும், நம்மை செல்வமாக உடையவனுமாகிய நாராயணன் தம்முடைய சிவந்த கைகளினால் என்னுடைய பிடித்து அம்மி மிதிக்கச் செய்தவாறு நான் கனவு கண்டேன் தோழீ.)

பொறி இடுதல்

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி,
அரிமுகன்  அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

(அழகிய புருவங்களை உடைய என் உடன்பிறந்தோர் அக்னி வளர்த்து அதன் முன்னர் என்னை நிறுத்தி நரசிங்கமாகிய அச்சுதனின் கைமேல் என்னுடைய கைகளை வைத்து நெற்பொரியை அக்னியில் இட நான் கனவு கண்டேன் தோழீ.)

மஞ்சள் நீர் தெளித்தல்

குங்குமம்  அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம் செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

(குளிர்ச்சியான சந்தனத்தையும் குங்குமத்தையும் திருமேனியில் பூசிக் கொண்டு யானையின் மீது கண்ணபிரானும் நானும் ஏறி ஊர்வலம் வந்தோம். எங்கள் இருவரையும் மஞ்சள் நீராட்டியதை நான் கனவில் கண்டேன் தோழீ.)

பாராயண பலன்

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!

(கண்ணபிரானை அடையவதற்காக பெரியாழ்வாரின் புதல்வியான ஆண்டாள் கண்ட கனவினைப் பற்றிய மேற்கூறிய தூய பத்து தமிழ் பாடல்களைப் போற்றிப் பாடுவோர் சகல சௌபாக்யங்களுடன் கூடிய திருமண வாழ்வினையும், நல்ல மக்கள் செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்.)

**********************************************
Vaaranam Aayiram Lyrics in Tamil and English - learn to read


Vaaranam Aayiram Lyrics in Tamil with Tamil explanation


Friday, June 16, 2017

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் - SRI MAHALAKSHMI ASHTAKAM LYRICS IN TAMIL WITH MEANING

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் 

Learn to read Mahalakshmi Ashtakam:


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம்:

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  1 ||

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  2 ||

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  3 ||

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  4 ||

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  5 ||

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  6 ||

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  7 ||

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  8 ||

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா.  ||

|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம்  ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்:

நமஸ்தே செல்வ ரூபிண்யை!
நமஸ்தே கமலவாசினி!
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா!

(தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும். 
தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.)

 ஸ்தோத்திர  விளக்கம்:

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  1

வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே!
ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே!
தேவர்களால் வழிபடப்படுபவளே!
சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  2

எல்லோரும் வணங்கும்படியாக கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே!
கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே!
மஹாலக்ஷ்மித்தாயே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  3

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே!
அனைத்து வரங்களையும் அளிப்பவளே!
எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே!
எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  4

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே!
மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே!
மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மையே!

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி |
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  5

முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே!
யோக நிலையில் தோன்றியவளே!
யோக வடிவாகத் திகழ்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் மாதாவே!

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  6

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே!
எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே!
அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே!
பெரும் பாவங்களை அழிப்பவளே!மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அம்மா!

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  7

பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே!
மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் தாயே!

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||  8

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே!
பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே!
பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே!
உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும்.
தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா.  ||

தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

***********************

Learn - Mahalakshmi Ashtakam stotram lyrics in Tamil, English and Hindi

Mahalakshmi Astakam stotram lyrics in tamil with explanation



=========================================================

MAHALAKSHMI 108 POTRI in TAMIL

செல்வ வளம் பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி




(வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும் என்பது நம்பிக்கை.)



  1. ஓம் அன்பு லட்சுமியே போற்றி
  2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
  3. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
  4. ஓம் அம்ச லட்சுமியே போற்றி 
  5. ஓம் அருள் லட்சுமியே போற்றி 
  6. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி 
  7. ஓம் அழகு லட்சுமியே போற்றி 
  8. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி 
  9. ஓம் ஆகம லட்சுமியே போற்றி 
  10. ஓம் ஆதி லட்சுமியே போற்றி 
  11. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
  12. ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
  13. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி 
  14. ஓம் இதய லட்சுமியே போற்றி 
  15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
  16. ஓம் ஈகை லட்சுமியே போற்றி 
  17. ஓம் உலக லட்சுமியே போற்றி
  18. ஓம் உத்தம லட்சுமியே போற்றி 
  19. ஓம் எளிய லட்சுமியே போற்றி 
  20. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி 
  21. ஓம் ஒளி லட்சுமியே போற்றி 
  22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி 
  23. ஓம் கஜ லட்சுமியே போற்றி 
  24. ஓம் கனக லட்சுமியே போற்றி 
  25. ஓம் கம்பீர லட்சுமியே போற்றி 
  26. ஓம் கான லட்சுமியே போற்றி 
  27. ஓம் கிரக லட்சுமியே போற்றி 
  28. ஓம் குண லட்சுமியே போற்றி
  29. ஓம் குங்கும லட்சுமியே போற்றி
  30. ஓம் குடும்ப லட்சுமியே போற்றி 
  31. ஓம் குல லட்சுமியே போற்றி 
  32. ஓம் கேசவ லட்சுமியே போற்றி 
  33. ஓம் கோவிந்த லட்சுமியே போற்றி 
  34. ஓம் கோமாதா லட்சுமியே போற்றி
  35. ஓம் சர்வ லட்சுமியே போற்றி 
  36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி 
  37. ஓம் சக்தி லட்சுமியே போற்றி 
  38. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
  39. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி 
  40. ஓம் சாந்த லட்சுமியே போற்றி 
  41. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி 
  42. ஓம் சீல லட்சுமியே போற்றி 
  43. ஓம் சீதா லட்சுமியே போற்றி 
  44. ஓம் சுப்பு லட்சுமி போற்றி 
  45. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி 
  46. ஓம் சூரிய லட்சுமியே போற்றி 
  47. ஓம் செல்வ லட்சுமியே போற்றி 
  48. ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
  49. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி 
  50. ஓம் சொரூப லட்சுமியே போற்றி 
  51. ஓம் சவுந்தர்ய லட்சுமியே போற்றி 
  52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
  53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
  54. ஓம் தன லட்சுமியே போற்றி 
  55. ஓம் தான்ய லட்சுமியே போற்றி 
  56. ஓம் திரிபுர லட்சுமியே போற்றி 
  57. ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி 
  58. ஓம் திலக லட்சுமியே போற்றி 
  59. ஓம் தீப லட்சுமியே போற்றி 
  60. ஓம் துளசி லட்சுமியே போற்றி 
  61. ஓம் துர்கா லட்சுமியே போற்றி 
  62. ஓம் தூய லட்சுமியே போற்றி 
  63. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி 
  64. ஓம் தேவ லட்சுமியே போற்றி 
  65. ஓம் தைரிய லட்சுமியே போற்றி 
  66. ஓம் பங்கய லட்சுமியே போற்றி 
  67. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி 
  68. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி 
  69. ஓம் பார்கவி லட்சுமியே போற்றி 
  70. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி 
  71. ஓம் பொருள் லட்சுமியே போற்றி
  72. ஓம் பொன்னிற லட்சுமியே போற்றி 
  73. ஓம் போக லட்சுமியே போற்றி
  74. ஓம் மங்கள லட்சுமியே போற்றி 
  75. ஓம் மகா லட்சுமியே போற்றி 
  76. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
  77. ஓம் மாதா லட்சுமியே போற்றி
  78. ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி 
  79. ஓம் மாசிலா லட்சுமியே போற்றி 
  80. ஓம் முக்தி லட்சுமியே போற்றி 
  81. ஓம் மோன லட்சுமியே போற்றி 
  82. ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி 
  83. ஓம் வர லட்சுமியே போற்றி 
  84. ஒம் வாழும் லட்சுமியே போற்றி 
  85. ஓம் விளக்கு லட்சுமியே போற்றி 
  86. ஓம் விஜய லட்சுமியே போற்றி 
  87. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி 
  88. ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி 
  89. ஓம் வீர லட்சுமியே போற்றி 
  90. ஓம் வெற்றி லட்சுமியே போற்றி 
  91. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி 
  92. ஓம் வைர லட்சுமியே போற்றி 
  93. ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
  94. ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி 
  95. ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி 
  96. ஓம் நாராயண லட்சுமியே போற்றி 
  97. ஓம் நாக லட்சுமியே போற்றி 
  98. ஓம் நாத லட்சுமியே போற்றி 
  99. ஓம் நித்திய லட்சுமியே போற்றி  
  100. ஓம் நீங்கா லட்சுமியே போற்றி 
  101. ஓம் ரங்க லட்சுமியே போற்றி
  102. ஓம் ராம லட்சுமியே போற்றி 
  103. ஓம் ராஜ லெட்சுமியே போற்றி 
  104. ஓம் ஜெய லட்சுமியே போற்றி  
  105. ஓம் ஜீவ லட்சுமியே போற்றி 
  106. ஓம் ஜெக லட்சுமியே போற்றி 
  107. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி 
  108. ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!! 

******************************************************************

SANKATA NASHAN VINAYAGAR STHOTHRAM Lyrics TAMIL with explanation - சங்கட நாஷன விநாயகர் ஸ்தோத்ரம்

சங்கட நாஷன விநாயகர் ஸ்தோத்ரம்




(“Sankata” means Problem, and “Nashana” means elimination or destruction or removal. This stotram is from Narada Purana, where Lord Narada explains that worshipping Lord Ganesha with Sankata Nasana Ganapathi Stotram with utmost removes all problems and fears in life instantly.)

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை !
நந்தி மகந்தனை  ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !!

|| சங்கட நாஷன விநாயகர் ஸ்தோத்ரம் ||

|| ஸ்ரீ கணேஷாய நம: ||

நாரத உவாச்ச:-

ப்ரணம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம் |
பக்தாவாஸம் ஸ்மரே நித்யம் ஆயுஷ்: காமார்த்த ஸித்தயே ||  1 ||

பிரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்  |
த்ரிதீயம் கிருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம் ||  2 ||

லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச |
சப்தமம் விக்நராஜம்  ச தூம்ரவர்ணம் ததா  அஷ்டமம் ||  3 ||

நவமம் பாலச்சந்திரம் ச தஸமம் து விநாயகம் |
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம் ||  4 ||

த்வாத சைத்தானி நாமானி த்ரிசந்த்யம் ய: படேந்நர: |
நச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ ||  5 ||

வித்யார்த்தீ  லபதே வித்யாம் தானார்த்தீ  லபதே தனம் |
புத்ரார்த்தீ  லபதே புத்ராம் மோக்ஷார்த்தீ   லபதே கதிம் || 
 ||  6 ||

ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர் மாஸை: பலம் லபேத் |
ஸம்வத்ஸரேண ஸித்தீம் ச லபதே நத்ர ஸம்சய: ||  7 ||

அஷ்டப்யோ ப்ராஹ்மணே ப்யஸ் ச லிகித்வ ய: ஸமர்ப்பயேத் |
தஸ்ய வித்யா பவேத் ஸர்வ கணேசஸ்ய ப்ரஸாதத: ||  8 ||

||  இதி நாரத புராணே சங்கட நாஸன கணேஷ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்  ||


**************************************************************************


Sanakata Nashan Vinayaka stotram lyrics in English, tamil and hindi


Sanakata Nashan Vinayaka stotram Explanation in TAMIL


Sanakata Nashan Vinayaka stotram Explanation in English




**************************************************************************


சங்கட நாஷன விநாயகர் ஸ்தோத்ரம்,sankat nashan vinayaka stothram in tamil, sankat nashan vinayaka stothram in English, sankat nashan vinayaka stothram in Hindi, sankat nashan vinayaka stothram in Sanskrit, प्रणम्य शीर्षा देवं गौरीपुत्रं विनायकम्, pranamya sirasa devam gauri-putram vinayakam, ப்ரணம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்

*************************************************************************