Tuesday, December 20, 2022

sastha mala mantra in tamil - ஸாஸ்தா மாலா மந்த்ரம், த்யானம், பஞ்ச ரத்தினம், ஆரத்தி மங்களம், தேவர்கள் ஸ்துதி, தர்ம ஸாஸ்தா ஜன்ம துக்க வினாசன விருத்தம்:


ஸ்ரீ மஹா ஸாஸ்தா மாலா மந்த்ரம்:

1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக

த்யானம்

1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன் ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம் பூதநாயகா
2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர் ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்

த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி
ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்

பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்
2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்
3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்
5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்

ஆரத்தி மங்களம்

1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்
2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்
3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்
திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
(கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்)

தேவர்கள் ஸ்துதி

(மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும் ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம் மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம் மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும் அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும் துதிப்பது மிக விசேஷமாகும்.)

தேவர்கள் வேண்டுதல்

1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம
2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ நம
3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ நம
4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம
5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம
6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி ஜெகத்பதே
7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக ஜீவஸ்வரூபக
8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா சர்வநாயகா

தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க வினாசன விருத்தம்:

1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா
2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா
3. கையினால் அடியவர்கள் பூஜா நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்
4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்
5. கருணாகரா ஓங்கார பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா
6. பெரிதான காட்டினில் புகுந்து வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக் கொண்டோம்
7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்
8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்
9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ
10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில் தன்னிலோ
11. விண்ணவர்கள் போற்றும் பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ
12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா
13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே
14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான பொருளே
15. பாண்டி முதலான பல தேச வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்
16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்
17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்
18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்
19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்
20. பொய்யா தவமுனிவர் போற்றும் பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே
21. பொன்னம்பலத்தில் வளர் பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா
22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே
*******************************************************************

No comments:

Post a Comment