Saturday, December 24, 2022

குபேர லக்ஷ்மி மந்திரம் & குபேர லக்ஷ்மி 108 போற்றி

🔯ஸ்ரீ குபேர லக்ஷ்மி 108 போற்றிகள்


🔯கணபதி ஸ்லோகம்🔯

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

🔯குபேர லக்ஷ்மி ஸ்லோகம்🔯

திருமால் மார்பில் வாழும் லக்ஷ்மி
ஸ்ரீ வைகுண்டம் ஆளும் லக்ஷ்மி
தேவர்கள் போற்றும் மகாலட்சுமி
திருவருள் புரிய வீட்டிற்கு வா!!

🔯ஸ்ரீ குபேரர் துதி🔯

வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி!
குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி!
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி!
சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி!
மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி!
பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி!
தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி!

🔯குபேரன் காயத்ரி மந்திரம்🔯

ஓம் யக்ஷராஜாய வித்மஹே 
வைஸ்ரவ ணாய தீமஹி! 
தந்நோ குபேர ப்ரசோதயாத்!!

🔯குபேரன் மந்திரம்🔯

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம்மே 
தேஹி தாபய ஸ்வாஹா!

🔯குபேர தன ப்ராப்தி மந்திரம் 🔯

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ!

Om Shreem Hreem Kleem Shreem Kleem Vitteshvaraya Namah ||

🔯குபேர அஷ்ட-லக்ஷ்மிமந்திரம் 🔯

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்ரீம் ஶ்ரீம் குபேராய அஷ்ட-லக்ஷ்மி
மம் க்ரிஹே தனம் புராய புராய நம ॥

வருமானம் பெருக தினமும் சொல்ல வேண்டிய குபேர மந்திரம்:

(வெள்ளிக்கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து 108 குபேரன் போற்றி சொல்லிக் குடும்பத்துடன் வணங்கி வந்தால் வருமானம் பெருகும். நாள்தோறும் குறைந்தது 7 முறை உச்சரித்துக் குபேர தேவனை வேண்டுங்கள்.)

ஓம் ஹ்ரீம் க்ளீம்-சௌம்
ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாய யக்ஷ ராஜாய
தன தான்யாதிபதியே 
லக்ஷ்மி புத்ராய
ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ:

🔯108 குபேர போற்றி🔯

  1. ௐ அளகாபுரி அரசே போற்றி
  2. ௐ ஆனந்தம் தரும் அருளே போற்றி
  3. ௐ இன்பவளம் அளிப்பாய் போற்றி
  4. ௐ ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
  5. ௐ உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
  6. ௐ ஊக்கம் அளிப்பவனே போற்றி
  7. ௐ எளியோனுக்கு அருள்பவனே போற்றி
  8. ௐ ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
  9. ௐ ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
  10. ௐ ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
  11. ௐ ஓங்கார பக்தனே போற்றி
  12. ௐ கருத்தில் நிறைந்தவனே போற்றி
  13. ௐ கனகராஜனே போற்றி
  14. ௐ கனகரத்தினமே போற்றி
  15. ௐ காசு மாலை அணிந்தவனே போற்றி 
  16. ௐ கிந்நரர்கள் தலைவனே போற்றி
  17. ௐ கீர்த்தி அளிப்பவனே போற்றி
  18. ௐ கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
  19. ௐ குருவாரப் பிரியனே போற்றி
  20. ௐ குணம் தரும் குபேரா போற்றி
  21. ௐ குறை தீர்க்கும் குபேரா போற்றி 
  22. ௐ கும்பத்தில் உறைபவனே போற்றி
  23. ௐ குண்டலம் அணிந்தவனே போற்றி
  24. ௐ குபேர லோக நாயகனே போற்றி
  25. ௐ குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
  26. ௐ கேடாதனை நீக்கிடுவாய் போற்றி
  27. ௐ கேட்டவரம் அளிப்பவனே போற்றி
  28. ௐ கோடி நிதி அளிப்பவனே போற்றி
  29. ௐ சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
  30. ௐ சங்கரர் தோழனே போற்றி
  31. ௐ சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
  32. ௐ சமயத்தில் அருள்பவனே போற்றி 
  33. ௐ சத்திய சொரூபனே போற்றி
  34. ௐ சாந்த சொரூபனே போற்றி
  35. ௐ சித்ரலேகா பிரியனே போற்றி
  36. ௐ சித்ரலேகா மணாளனே போற்றி
  37. ௐ சிந்தையில் உறைபவனே போற்றி
  38. ௐ சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
  39. ௐ சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
  40. ௐ சிவபூஜை பிரியனே போற்றி 
  41. ௐ சிவ பக்த நாயகனே போற்றி
  42. ௐ சிவ மகா பக்தனே போற்றி
  43. ௐ சுந்தரர் பிரியனே போற்றி
  44. ௐ சுந்தர நாயகனே போற்றி
  45. ௐ சூர்பனகா சகோதரனே போற்றி
  46. ௐ செந்தாமரைப் பிரியனே போற்றி 
  47. ௐ செல்வ வளம் அளிப்பவனே போற்றி 
  48. ௐ செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
  49. ௐ சொர்ணவளம் அளிப்பவனே போற்றி 
  50. ௐ சொக்கநாதர் பிரியனே போற்றி
  51. ௐ சௌந்தர்ய ராஜனே போற்றி 
  52. ௐ ஞான குபேரனே போற்றி
  53. ௐ தனம் அளிக்கும் தயாபரா போற்றி
  54. ௐ தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி 
  55. ௐ திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
  56. ௐ திருவிழி அழகனே போற்றி
  57. ௐ திருவுரு அழகனே போற்றி
  58. ௐ திருவிளக்கில் உறைவாய் போற்றி
  59. ௐ திருநீறு அணிபவனே போற்றி
  60. ௐ தீயவை அகற்றுவாய் போற்றி
  61. ௐ துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
  62. ௐ தூயமனம் படைத்தவனே போற்றி 
  63. ௐ தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றி 
  64. ௐ தேவராஜனே போற்றி
  65. ௐ பதுமநிதி பெற்றவனே போற்றி 
  66. ௐ பரவச நாயகனே போற்றி
  67. ௐ பச்சை நிறப் பிரியனே போற்றி
  68. ௐ பவுர்ணமி நாயகனே போற்றி 
  69. ௐ புண்ணிய ஆத்மனே போற்றி 
  70. ௐ புண்ணியம் அளிப்பவனே போற்றி
  71. ௐ புண்ணிய புத்திரனே போற்றி 
  72. ௐ பொன்னிற முடையோனே போற்றி 
  73. ௐ பொன் நகை அணிபவனே போற்றி 
  74. ௐ புன்னகை அரசே போற்றி
  75. ௐ பொறுமை கொடுப்பவனே போற்றி
  76. ௐ போகம்பல அளிப்பவனே போற்றி 
  77. ௐ மங்கல முடையோனே போற்றி 
  78. ௐ மங்களம் அளிப்பவனே போற்றி
  79. ௐ மங்களத்தில் உறைவாய் போற்றி 
  80. ௐ மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி 
  81. ௐ முத்து மாலை அணிபவனே போற்றி
  82. ௐ மோகன நாயகனே போற்றி
  83. ௐ வறுமை தீர்ப்பவனே போற்றி 
  84. ௐ வரம் பல அருள்பவனே போற்றி 
  85. ௐ விஜயம் தரும் விவேகனே போற்றி 
  86. ௐ வேதம் போற்றும் வித்தகா போற்றி 
  87. ௐ வைர மாலை அணிபவனே போற்றி 
  88. ௐ வைகுண்டவாசப் பிரியனே போற்றி
  89. ௐ நடராஜர் பிரியனே போற்றி 
  90. ௐ நவதான்யம் அளிப்பவனே போற்றி 
  91. ௐ நவரத்தினப் பிரியனே போற்றி 
  92. ௐ நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி 
  93. ௐ நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
  94. ௐ வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
  95. ௐ ராவணன் சோதரனே போற்றி 
  96. ௐ வடதிசை அதிபதியே போற்றி 
  97. ௐ ரிஷி புத்திரனே போற்றி 
  98. ௐ ருத்திரப் பிரியனே போற்றி 
  99. ௐ இருள் நீக்கும் இன்பனே போற்றி
  100. ௐ வெண்குதிரை வாகனனே போற்றி
  101. ௐ கைலாயப் பிரியனே போற்றி 
  102. ௐ மனம் விரும்பும் மன்னவனே போற்றி 
  103. ௐ மணிமகுடம் தரித்தவனே போற்றி 
  104. ௐ மாட்சிப் பொருளோனே போற்றி 
  105. ௐ யந்திரத்தில் உறைந்தவனே போற்றி 
  106. ௐ யௌவன நாயகனே போற்றி 
  107. ௐ வல்லமை பெற்றவனே போற்றி 
  108. ௐ குபேரா போற்றி போற்றி 

🔯🔯🔯🔯🔯ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி🔯🔯🔯🔯🔯


No comments:

Post a Comment