Sunday, January 1, 2023

Saraswati Stuthi in Tamil | Saraswati Andathi in tamil

சரஸ்வதி_துதி



"சுராசுர சேவித பாத பங்கஜா
கரே விராஜத் கமனீய புஸ்தகா
விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா
சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா."

(பொருள்: தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக.)

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லுஞ் சொல்லாதோ கவி.

சரஸ்வதி_அந்தாதி

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்றொளிர்வாள்!
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் உட்பொருளாவாள்.

🍁🌷🍁🌷🍁🍁🌷🍁🌷🍁🍁🌷🍁🌷🍁🍁🌷🍁🌷🍁

No comments:

Post a Comment