Sunday, January 1, 2023

Kan drishti in tamil | கண் திருஷ்டி

கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி?



திருஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும்.  அடிக்கடி கொட்டாவி வரும். எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என்று ஒவ்வொரு கஷ்ட நிலைகளை சந்திக்க நேரிடும். அதோடு கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவையும் உண்டாகும்.

🔯கண் திருஷ்டி கழிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்?

- திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும்.
- திருஷ்டிக் கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டிக் கழிக்க வேண்டும். 

🔯திருஷ்டியை கழிப்பது எப்படி?

🔯வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம்.
🔯வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடி வைக்கலாம். ஏனெனில் ரோஜா செடியில் உள்ள முட்கள் திருஷ்டியை போக்கி விடும்.
🔯வீட்டின் வாசலில் பூசணிக்காய், அகோரமான பொம்மை ஆகியவற்றை தொங்க விடுவதை விட இயற்கைத் தாவரங்கள், வாழை, செடி கொடிகள் போன்றவற்றை வைக்கலாம். ஏனெனில் இவைகள் எந்த திருஷ்டியையும் நெருங்க விடாது.
🔯வீடு மற்றும் அலுவலகத்தில் வைக்கும் மீன் தொட்டியை வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்க வேண்டும்.
🔯குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல், அலர்ஜி ஆகியவை நீங்கும்.
 🔯அதுவும் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இம்முறைப்படி குளிக்கலாம்.
🔯வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் கற்றாழை கட்டி தொங்க விடலாம். வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என்று இரண்டையும் மாற்றி மாற்றி கோர்த்து தொங்க விடலாம்.
🔯படிகாரக் கல்லை கொண்டு திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும்.
🔯கண் திருஷ்டியானது குழந்தைகளை பாதித்தால், செப்பு காசை குழந்தையின் கையில் கட்ட வேண்டும். இதனால் துஷ்ட சக்திகளும், கண் திருஷ்டியும் அண்டாது.
🔯ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லி, அதனை யாருக்காவது தானமாக கொடுத்து விட வேண்டும்.
🔯கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. குறிப்பாக இம்முறையை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
🔯கடுகு, உப்பு, 3 மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமையில் செய்ய வேண்டும்.

ஆகாச கருடகிழங்கு

🔯நம் வீட்டை கண் திருஷ்டி , விஷ ஜந்துக்கள் நெருங்காமல் இருக்க வேண்டுமெனில் ஆகாச கருடன் மிகச் சிறந்த ஒரு பொருளாகும். ஆகாச கருடன் பலன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்...
நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல வழிமுறைகளை நாம் கைவிட்டு விட்டோம்.
🔯நம் முன்னோர்கள் வீட்டில் கண் திருஷ்டியை அழிக்கவும், விஷ ஜந்துக்களை நீக்க பயன்படுத்திய பொருள் தான் ஆகாசகருடன் கிழங்கு. 
இன்றளவும் பலரும் வீட்டின் முன் ஒரு நூலில் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் அதன் மகத்துவம் என்ன அதை ஏன் கட்டி வைத்தார்கள் என்ற பின்னணி நம்மில் பலருக்கு தெரியாமலேயே அதை செய்து வருகின்றோம்.
ஆகாசகருடன் கிழங்கின் மகத்துவம் என்ன, அதை வீட்டில் ஏன் தொங்க விட வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஆகாசகருடன் கிழங்கு ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் அதை சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, கிழங்கிலிருந்து கொடி தழைக்க ஆரம்பிக்கும். அப்படி அந்த கிழங்கு வெகு விரைவாக தழைத்துவிட்டால் வீட்டில் சுபிட்சமாகிவிடும்.
வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் நுண்கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்குகிறது. ஈரப்பதத்தை நீக்கத்தான் அவ்வப்போது சாம்பிராணி புகை போடுகிறோம்.
இந்த ஆகாச கருடன் கிழங்கு 24 மணி நேரமும் இந்த வேலையை செய்து நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
பெயர் காரணம்:
ஆகாச கருடன் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமமாகும். அதாவது கருடன் இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் நெருங்காது. அப்படியே வந்தாலும் அதன் விஷம் பங்கப்படும். அப்படி தான் இந்த ஆகாச கிழங்கு வைத்திருக்கும்,ம் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது.
அதே போல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற கெட்ட சக்திகள் அணுகாது.
அதையும் மீறி அந்த சக்தி வந்தால் ஆகாச கருடன் தன் உயிரைக் கொடுத்து நம்மை காக்கும்.
 அதாவது கெட்ட சக்தி அதிகமாக இருப்பின் அதை அழிக்கும்.
 கிழங்கு அந்த கெட்ட சக்திக்கு தன்னை பலியிட்டு, நம்மைக் காக்கும். அதிக கெட்ட சக்திகளை எதிர்கொண்ட ஆகாச கருடன் கிழங்கு கருகி அழுகிவிடும். 
 
அப்படி அழுகிப் போயிருந்தால் அதை வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, வீட்டில் பூஜை செய்து வேறொரு ஆகாச கருடன் கிழங்கை கட்டிவிடுங்கள்.
சித்தர் பாடல்:
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார்- வரையிற் றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு கருடன் கிழங்கதனைக் கண்டு.
கருடன் கிழங்கை அரையாப்பு கட்டி, வெள்ளை கொருக்கு மாந்தை, அற்புத விரணம் தீரும்.
அதாவது ஆகாச கருடனைக் கண்டாலே கடும் விஷத்தன்மை உடைய பாம்புகள் (சர்ப்பங்கள்) கூட ஓடி விடும்.

#பூசணிக்காய்_எலுமிச்சை பலி கொடுக்கும் முறை.

வியாபாரம் நடக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமாவாசை தினத்தில் பகல் 12 மணிக்கு பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சையை பலிகொடுப்பது நமது வழக்கம். இவ்வாறு செய்வதால் வாணிபம் செல்வம் வளரும், கல்வி, மகிழ்ச்சி மலரும் என்பது நம்பிக்கை.

#தேங்காய்_உடைப்பவர்கள், அமாவாசை அன்று காலையிலேயே ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் கலந்து தண்ணீரும் சுத்தம் செய்த தேங்காய் ஒன்றும் சாமி படத்தின்முன் வைத்து வழிபட வேண்டும் பிறகு.மதியம் 12 மணிக்கு கடை அல்லது வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீரால் தேங்காயை கழுவி. குடுமியில் ஒரு விலை கற்பூரத்தை வைத்து ஏற்றி, கடை மற்றும் வீட்டை பார்த்தாற்போல் நின்று வலப்பக்கமாக மூன்று சுற்றும், இடப்பக்கமாக மூன்று சுற்றும் சுற்றி வாசலில் உடைக்க வேண்டும். உடைபடும் தேங்காய் சில்லு சில்லாய் உடைபடுமாறு ஓங்கி அடிக்க வேண்டும். தேங்காய் சில்லுகளை உரிமையாளர்கள் எவரும் எடுக்கக் கூடாது.

#வெள்ளை_பூசணிக்காய்

பூசணிக்காயின் காம்பு பகுதியில் வில்லை போல் துளையிட்டு அதில் மஞ்சள் குங்குமம், ஒன்பது ரூபாய்க்கான சில்லறைகளை போட்டு மூடிவிட வேண்டும். பிறகு பூசணிக்காய்க்கு மஞ்சள் குங்குமம் பூசி, மஞ்சள் தண்ணீர் தெளித்து வாசலில் வைக்கவேண்டும். பூசணிக்காயை உடைக்கும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டாயம் கட்டி இருக்க வேண்டும் ஏனெனில், பூசணிக்காய்க்கு திருஷ்டிகளை கவரும் சக்தி உண்டு. அதனால், பூசணிக்காயை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். இதனால் அவருக்கு எதுவும் நேராமல் இருக்கவே இந்த கருப்பு கயிறு. மேலும் பூசணிக்காய் உடைப்பவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். பூசணிக்காயை உடைத்தபிறகு மஞ்சள் நீரை தெளித்துவிட்டு அப்படியே சென்று விடுவது உத்தமம். உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால் மஞ்சள்நீர் தெளித்துவிட்டு கை கால்களை சுத்தமாக கழுவி விட்டு கடை மற்றும் வீட்டிற்குள் வரலாம். உடைத்த பூசணிக்காயை மஞ்சள் நீர் தெளித்த பிறகு மற்றவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அப்புறப்படுத்துவது சிறப்பு. 

#எலுமிச்சம்பழம்

கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும்படி கடை வாசலில் வைக்கவும். கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி இடம் வலமாக மாற்றி எறியவும். மற்றொரு எலுமிச்சம் பழத்தில் மஞ்சள் குங்குமம் பூசி, கற்பூரம் வைத்து ஏற்றி, வீடு/கடையினை பார்த்தவாறு இட வலமாக மூன்று சுற்றுகள் சுற்றி வாசலில் உடைத்து இரு பாகமாய் கிழித்து வலக்கையில் இருப்பதை
இடது புறமாகவும், இடதுகையில் இருப்பதை வலது புறமாகவும் வீச வேண்டும். இதை அமாவாசை தினத்தில் மட்டுமல்லாமல் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகலிலும் செய்யலாம். இதனால் தீய சக்திகள் மற்றும் திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும்.
தேங்காய், எலுமிச்சை, பூசணிக்காய் என எந்த பலி கொடுத்து முடித்ததும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலை மற்றும் உடம்பில் தெளித்துக்கொண்டு சுத்தி போட்டவர், உள்ளே வந்ததும் தண்ணீர் குடிக்க கொடுக்கவும். இப்படி செய்து வருவதால் தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கும்.

கண் திருஷ்டி பரிகாரங்கள்.

கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை ‘திருஷ்டி’ என்பார்கள். ‘திருஷ்டி’ என்பதற்கு ‘பார்வை’ என்று பொருள். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.
பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும். சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.

திருஷ்டி தோஷ விளைவுகள்

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சினை தீருவதற்குள், அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.

தோஷ நிவர்த்தி

கண் திருஷ்டி நீங்குவதற்கு, ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.
தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.
சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான். சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான். திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் நலக்குறை இருந்து கொண்டே இருக்கும். கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள். அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.

வீடு- அலுவலக பரிகாரங்கள்

வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.
காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்திரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளாற்று பதிக பாராயணம் ஒலிக்க செய்யலாம்.
செடி ஆகியவற்றை வளர்க்கலாம். வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா
போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள். மேலும் குலதெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தியாகும்.
வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி, ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வைக்கலாம்.
வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற் கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை, பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம். #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 

No comments:

Post a Comment