Monday, January 2, 2023

ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம்


  • நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை என்பர் சான்றோர்.
  • பல்வேறு சூழ்நிலைகளில் சிக்கி அவதியுறுவோர் ஆதிசங்கரர் இயற்றிய லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தை மனமுருக பாராயணம் செய்தால், அனைத்து சங்கடங்களிலிருந்தும் விடுபடலாம். மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கைதூக்கி காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கையாகும்.

ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் 

1.ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ரபாணே
போகீந்த்ர-போக மணிரஞ்ஜித புண்யமூர்தே !
யோகீஶ ஶாச்வத சரண்ய பவாப்தி-போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(திவ்யமான பாற்கடலில் பள்ளி கொண்ட சக்ரபாணியே! ஆதிசேஷன் உடற்கட்டில் உள்ள மணிகளால் நிறமெய்திய திருமேனி படைத்தவரே! யோகியருக்கும், சரணம் என்று வந்த பக்தருக்கும் நித்ய வாஸஸ்தலம் நீரேயல்லவா? ஸம்ஸாரக் கடலைத் தாண்ட படகுபோல் இருக்கும் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மனே! என்னை கை தூக்கிவிட்டு அருள வேண்டும்.)

2. ப்ரஹ்மேந்த்ர-ருத்ர மருதர்க கிரீட கோடி
ஸங்கட்டி-தாங்க்ரி-கமலா-மல காந்தி-காந்த !
லக்ஷ்மீ லஸத்-குசஸ-ரோருஹ ராஜ-ஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(பிரம்மா, இந்திரன், ருத்ரன், சூர்யன் ஆகியோரது கிரீட முனைகள் வருடும் திருவடித் தாமரைகள் கொண்டவரே! மிக அழகியவரே! லக்ஷ்மியின் மார்பகங்களாகிய தாமரை மீதுறையும் அன்னமே! லக்ஷ்மீ நரஸிம்ஹா! எனக்கு கை கொடுத்து முன்னேறச் செய்ய வேண்டும்.)

3. ஸம்ஸார தாவ தஹனா துர பீகரோரு
ஜ்வாலா வலீபிரதிதக்த தனூருஹஸ்ய!
த்வத்-பாத பத்ம ஸரஸீம் சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரமாகிய காட்டுத் தீயினால் திகைத்தும், பயங்கரமான பெரிய ஜ்வாலைகளால் பொசுக்கிய உடலையுடையவனும், உமது திருவடியாகிய குளத்தையே நாடி வந்துள்ளவனுமான எனக்கு கை கொடுத்து முன்னேறச்செய்ய வேண்டும்.)

4. ஸம்ஸார ஜால பதிதஸ்ய ஜகந் நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ-ஷோபமஸ்ய !
ப்ரோத்கம்பித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(உலகையாளும் உத்தமரே! ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹா! ஸம்ஸாரம் என்ற வலையில், புறக்காரணங்களுக்கான இரை கொண்ட தூண்டில் நுனியில் துவளும் மீன் போன்றிருக்கிறவனும், வெகுவாக நடுக்கம் கொண்டு அவதியுறும் என்னை கை தூக்கி காத்திட வேண்டும்.)

5. ஸம்ஸார கூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்:க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய!
தீனஸ்ய தேவ க்ருபயா பத-மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(உலகியல் என்ற ஆழமான, பயங்கரமான பாழுங்கிணற்றில் வீழ்ந்து, நூற்றுக்கணக்கான துன்பப் பாம்புகள் சூழப்பட்டு தவிக்கும் நான் உம்மையே நாடிவந்துள்ளேன். தயவுடன் என்னை கை தூக்கி காக்க வேண்டும்.)

6. ஸம்ஸார பீகர கரீந்த்ர கராபி காத
நிஷ்பீட்ய மானவபுஷ:ஸ் ஸகலார்திநாச !
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரம் என்ற கொடிய யானை துதிக்கையால் அடிப்பட்டு நசுங்கிய உடலையுடையவனும், உயிர்போகும் தருவாயிலும் உலகியல் துன்பம் மிகுந்து திகைத்தும் இருக்கிற என்னை, லக்ஷ்மீநரஸிம்ஹா நீர் கை கொடுத்து தூக்கிவிட வேண்டும். நீர் அனைவரது துன்பத்தையும் போக்குபவரன்றோ!)

7. ஸம்ஸார ஸர்ப்ப விஷதிக்த மஹோக்ர-தீவ்ர
தம்ஷ்ட்ரா-க்ர கோடி பரிதஷ்ட   வினஷ்ட மூர்த்தே: !
நாகாரி-வாஹன ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரமாகிய பாம்பின் விஷம் தோய்ந்த கொடிய பல் நுனியால் கடிக்கப்பட்டு அழியவிருக்கும் சரீரத்தையுடைய எனக்கு, ஹே கருட வாஹனரே! அம்ருதக் கடலில் வாழ்பவரே! லக்ஷ்மீ நரஹிம்ஹா! கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.)

8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மனந்த-கர்ம
சாகாயுதம் கரணபத்ர மனங்க புஷ்பம் !
ஆருஹ்ய து:க்க பலினம் பததோ தயாலோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(உலகியியல் என்பது ஒரு மரம், அது பாபங்களை விதையாகக் கொண்டது. கணக்கில்லாக கர்மாக்களாகிய கிளைகளையும், புறக்கரணங்களாகிய இலைகளையும், காமமாகிய பூக்களையும், துன்பமாகிய பழங்களையும் கொண்டது. அதன் மீது ஏறி விழ இருக்கிறேன். ஹே தயாபரனே! லக்ஷ்மீந்ருஸிம்ஹா! எனக்கு கைகொடுத்து காக்கவேண்டும்.)

9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால-
நக்ர க்ரஹ க்ரஸித நிக்ரஹ விக்ரஹஸ்ய!
வ்யக்ரஸ்ய ராக நிசயோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரமாகிய கடலில் மிக நீண்ட, பயங்கர காலமாகிய முதலைப் பிடியில் விழுங்கப்பட்ட உடலையுடையவனும், எப்படியாவது பிழைக்கவேண்டும் என்று திகைத்து நிற்பவனும், பற்று, பாசம் ஆகிய அலைகளால் அலைக்கழிக்கப் பட்டவனுமான என்னை கை கொடுத்து தூக்கிவிட வேண்டும்.)

10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜன முஹ்யமானம்
தீனம் விலோகய விபோ கருணாநிதே மாம்!
ப்ரஹ்லாத கேத பரிஹார க்ருதாவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரமாகிய கடலில் மூழ்கி மயக்கமும் துன்பமும் அடைந்த என்னை, ஹே கருணைக் கடலே! வல்லவரே! கவனிக்க வேண்டும். நீர் பிரஹ்லாதன் துயரைப் போக்கவே அவதரித்தவராயிற்றே! ஹேலக்ஷ்மீ நரஸிம்ஹா! எனக்கு கைகொடுத்து காக்க வேண்டும்.)

11. ஸம்ஸார-கோர-கஹனே சரதோ முராரே !
மாரோக்ர பீகர ம்ருக ப்ரசுரார்த்தி-தஸ்ய !
ஆர்தஸ்ய மத்ஸர நிதாக ஸுது:க்கி-தஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஸம்ஸாரமாகிய கொடிய காட்டில் திரிந்து, காமனாகிய பயங்கர மிருகத்தினால் மிகவும் வேதனை செய்யப்பட்டு, பொறாமை, கர்வம் ஆகிய கோடையும் ஒருபுறம் வாட்டி வதைக்கிறதே! இவ்வாறு துயரப்படும் என்னை, ஹே லக்ஷ்மீ நரஸிம்ஹா! கைகொடுத்து, அரவணைத்து காக்கவேண்டும்.)

12. பத்வா கலே யமபடா பஹு தர்ஜயந்த:
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம் மாம்:!
ஏகாகினம் பரவசம் சகிதம் தயாலோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(யமகிங்கரர்கள் என்னை கழுத்தில் கட்டி, அதட்டியபடி இழுக்க, ஸம்ஸாரபாசங்கள் பின் இழுக்க, எங்கோ இழுத்துச் செல்கிறார்களே. நான் தன்னந்தனியாக, பிறருக்கு அடிமையாகி, பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேனே. ஹே லக்ஷ்மீ ந்ருஸிம்ஹா! தயையின் உருவே! கைகொடுத்து காக்க வேண்டும்.)

13. லக்ஷ்மீ-பதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
யஜ்ஞேஶ யஜ்ஞ மதுசூதன விஶ்வரூப !
ப்ரஹ்மண்ய கேஶவ ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஹே லக்ஷ்மீபதே! கமலநாப! ஸுரேச! விஷ்ணுவே! யாகங்களை பாதுகாப்பவரே! யாகங்களின் உருவானவரே! மதுவரக்கனை ஸம்ஹரித்தவரே! உலகவடிவானவரே! வேதங்களை நேசிப்பவரே! கேசவ! ஜனார்தன! வாஸுதேவ லக்ஷ்மீந்ருஸிம்ஹா! என்னை கைதூக்கி விடவேண்டும்.)

14. ஏகேன சக்ர-மபரேண கரேண சங்கம்
அன்யேன ஸிந்து தனயா மவலம்ப்ய திஷ்டன்!
வாமே-தரேண வரதா-பய பத்ம சின்ஹம்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ஒரு கையில் சக்ரத்தையும், மற்றதில் சங்கையும், இன்னொன்றில் லக்ஷ்மியை பற்றிக் கொண்டும், வலது கையில் வரத-அபய-பத்மங்களையும் தாங்கியவாறு காட்சிதரும் லக்ஷ்மீந்ருஸிம்ஹா! என்னை கைகொடுத்து காக்கவேண்டும்.)

15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதனஸ்ய
சோரை:ர் ப
மஹா பலிபி-ரிந்த்ரிய நாமதேயை: !
மோஹாந்த கார குஹரே வினிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(நானோ குருடனாகி விட்டேன். மேலும், மிக பலம்வாய்ந்த புறக்காரணங்கள் என்ற திருடர்கள் எனது விவேகம் என்ற பெரும் செல்வத்தை களவாடி விட்டனர். இன்னும், மோஹம் என்ற பேரிருள் சூழ்ந்த குகையில் தள்ளப்பட்டும் இருக்கிறேன். ஹே லக்ஷ்மீந்ருஸிம்ஹா! எனக்கு கைகொடுத்து உதவவேண்டும்.)

16. ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக-
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ!
பக்தானு ரக்த பரிபாலன பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்!!
(ப்ரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகர், வியாஸர் முதலிய பரமபக்தர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவரே! பக்தர்களையும், நேசிப்பவர்களையும் பாதுகாப்பதில் கருத்துடையவரே, ஹே லக்ஷ்மீ ந்ருஸிம்ஹா! எனக்கு கை கொடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும்!)

17. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேன
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி ஶங்கரேண !
யே தத் படந்தி மனுஜா ஹரிபக்தி யுக்தா:ஹ
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம் !!
(லக்ஷ்மீநரஸிம்ஹனின் திருவடித்தாமரைகளில் மொய்க்கும் தேனியாக இருக்கும் சங்கரரால் மங்களகரமான இந்த ஸ்தோத்ரம் இயற்றப்பட்டது. இதை பக்தியுடன் படிப்பவர் ஸ்ரீநாராயணனின் திருவடித்தாமரையை அடைவர்..)

|| இதி ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் ||

நரசிம்மர் காயத்ரி:
வஜ்ர நகாய வித்மஹே,
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி |
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத் ||

ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்மரின் திருவடிகளே சரணம் !

***************************************************************






No comments:

Post a Comment