Tuesday, January 3, 2023

ஸ்ரீ கோதை(ஆண்டாள்) அஷ்டகம்

ஸ்ரீ கோதை(ஆண்டாள்) அஷ்டகம்


1. ஸ்ரீ கோதா பிராட்டியாரும் - அன்னமும்
சன் மான சாப்ஜ ப்ரவணாம் சார அசார விவேகி நீம் |
சத் கதிம் ஸூ த்த ரூபாம் தவாம் கோதே ஹம்சீம் பிரசஷதே || 1 ||
(தாமரை மலரில் வீற்று இருக்கும். சாதுக்கள்,தேவர்கள் மனதில் குடி கொண்டு அருளுகிறீர். உம்மையே மனதால் போற்றி புகழ்ந்து இருப்பார்கள். அன்னம், சாரமான பாலை பருகி அசாரமான நீரை நீக்கும்; நடை அழகு உண்டு; தூய வெண்மையாய் இருக்கும். அதுபோல, அல்ப சாரம் நீக்கி சார தமம் விஷயங்களையே காட்டி அருளி பிறந்தன்கள் அருளினீர்; அந்த அந்தந்களுக்கும் நடை பயிற்றுவிப்பீர் - நல்ல நடத்தை கற்ப்பிப்பீர். சுத்த சத்வமயமாய் உள்ளீர்.)

2. ஸ்ரீ கோதா பிராட்டியாரும் - சிந்தாமணியும்
தேஜோ மய ஸ்வரூபத்வாத் ஸ்ரீ மத் சேவித வைபாவாத்|
சிந்தாமணி சமா கோதே தேசிகை தவமி ஹோச்யசே || 2 ||
(ஒளி மயமான ஸ்வரூபம். எம்பெருமானுக்கே ஒளி கூட்ட வல்ல தேஜஸ் உடையவராய் தேஜோ மயமாய் விளங்குகிறீர். மார்பிலே இடையறாமல் அணியப் பெற்று இருக்கும் - வலப்பக்கம் ஸ்ரீ தேவி போல இடப்பக்கம் விடாமல் சேவை சாதிக்கிறீர். வேண்டுவார்க்கு வேண்டுமவற்றைத் தரக் கூடியது. வேண்டுவார்க்கு நீங்காத செல்வம் நிறைந்து, வாயு நன்மக்களைப் பெற்று, எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று அருளுகிறீர்.)

3. ஸ்ரீ கோதா பிராட்டியாரும் - கற்பக வ்ருக்ஷமும்
அநேக சாக உஜ்ஜ்வலீத ஸ்வரூபவாத் அநந்தம போகி ப்ரிய வர்த்தகத்வாத் |
ஸூ ரேச பூஸா ஸூ மன ப்ரதா நாத் ஸூ ரத் ருமேணாசி சமாத்ய கோதே  || 3 ||
(பற்பல கிளைகளை யுடையதாய், ஒளி மிக்கதாய், விரும்பியவற்றைக் கொடுத்து இன்புறச் செய்யும், தேவேந்த்ரனும் சசியும் விரும்பும் புஷ்பங்களை தரும், சாகைகள் உடைய வேத சாரம் திருப்பாவை -நாச்சியார் திருமொழி, புகழ் ஒளி வீசிக் கொண்டு பெருமாளுக்கு இனியவளாய், அமரர்கள் அதிபதியும் விரும்பி சூடிக் கொள்ளும் பூ மாலை சூடிக் கொடுக்கும் சுடர் கொடி.)

4. சூடிக் கொடுத்த நாச்சியாரும் - சூரியனும்
சத் கோ விலாசேன தமோ ஹரத்வாத் சமஸ்த சத்வந்தித மண்டலத்வாத் |
பதமான நௌஜ்ஜ்வல்யகர ப்ரபாவாத் பாஸீஹே கோதே ரவிதுல்ய சீலா || 4 ||
(கதியாயிரம் இரவி, புறவிருளை நீக்கி -வேதம் அனைத்தைக்கும் வித்து -அஜ்ஞ்ஞனம் அகவிருள் போக்கி, ஜ்ஞான ஒளி வீசி அருளுகிறீர். சான்றோர் காலை மாலை சந்த்யா வந்தனம் -தேஜோ மண்டலம் உடையவராய் மண்ணுலகோர் எப்பொழுதும் வணங்கும்படி, தாமரை மலர்களை மலரச் செய்யும் - தாமரை போன்ற திருமுகம் உடைய அரங்கனை மலரச் செய்கிறீர்.)

5. ஆண்டாளும் - சந்திரனும்
கலா நிதித்வாத் கமலாத் மகத்வாத் பவார்த்தி தாப ஷபண ஸ்வ சைத்யாத்
சதா மகா விஷ்ணு பதா | நுஷங்காத் ஹிமாம் ஸூ துல்யா த்விமி ஹாசி கோதே || 5 ||
(பதினாறு கலைகள் -ஆய கலைகள் 64 அறிந்தவள், அமர் கடலைக் கடைந்த பொழுது தோன்றியவள். அதனால், தண்ணீர் போன்று குளிர்ந்தவள். கமலையான ஸ்ரீ மகா லஷ்மி தேவி, ஆகாசத்தையே இருப்பிடமாக கொண்டு, பாதார விந்தங்களையே பற்றி கேசவ நம்பியை கால் பிடித்து நிற்கிறீர்.)

6. ஸ்ரீ கோதா பிராட்டியும் - கிளியும்
சயாமாம் த்விஜாதி ப ஸூ தாம் ஸ்ரவணாபி ராமம்
மஞ்ஜூ ஸ்வ நாம் மத நமீச்வரஜம் பஜந்தீம்
கோதே குரோஸ் த்ரிஜகதாம் குணசாலி நீம் த்வாம்
லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி || 6 ||
(கிளி, பசுமை நிறம் கொண்டதாய் இருக்கும். விஷ்ணு சித்தன் திருக்குமாரி கோதை, அணி மழலைக் கிளி மொழி. சாக்ஷாத் மன்மதன், கண்ணனையே பாடி தொழுதேன்.)

7. ஸ்ரீ கோதா தேவியும் - காம தேவனும்
வ்ருஷப்ரியாம் விஸ்வ ஜனாகிலார்த்த
விஸ்ராண நோத்காம் விதி வாச வேட்யாம்
ஸ்ருதி பிரசன்னாம் ஸூ ரபிம் விசங்கே
ஸூ வஸ்தாம் மகார்ஹாம் பவதீம் து கோதே || 7 ||
(மழை பொழியச் செய்யும் இந்த்ரனிடம் உள்ள காம தேனு கொடை வள்ளல். ஸ்வர்க்கத்தில் இருக்கும் காமதேனு (யாகம் செய்பவர்களால் விரும்பப் படும் - நெய், பால் கொடுப்பதால்), அதுபோல, திருமால் சந்நிதியில் உள்ளவள், விஷ்ணு பத்னீ, புருஷார்த்தங்கள் எல்லாம் வழங்கும் கோதா தேவி, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸ்துதிக்கப் படுபவள்.)

8. நீராட்டத்தின் பயன்
கோதே ஸ்நாதாசி மாதஸ் த்வமிஹ நிகம சாஸ்த்ரோக்த மந்திர க்ரியாப்தம்
ஏதே நைவாதி பாபா வயமபி சகலா முக்த பாபா பவாம
லோகே த்ருஷ்டஞ்ச கர்மேத் ருசமிஹ சகலை ஸ்வ ப்ரஜோரோக சாந்த்யை
மாதா பீத்வா கஷாயம் தனய மத நிஜ ஸ்தன்ய தா நேன பாதி || 8 ||
(நீராடுவது நீர், ஆனால், பாபங்கள் தொலைவது எங்களுக்கு. தாய் பாலைக் கொடுத்து பிறவிப் பிணியைப் போக்கி அருளுகிறீர். முலை வழியே ஔஷதம் அருளும் தாய் போல, நீர், விந்தையிலும் விந்தை, ஆண்டாளும் அரங்கனும் நம்மை காப்பர்.)

ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!!!
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்!!!
ஸ்ரீ வேத பிரான் பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்!!!
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்!!!
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!



No comments:

Post a Comment